Sunday, September 12, 2010

பதிவுலகம் - இப்படிக்கு நான்
சித்தப்ஸ் பா.ரா அழைத்த தொடர் பதிவு இது. ஒன்னரை மாதத்தில் இப்பொழுது கிடைத்த 10 நிமிடத்தில் நெய்த பதிவு.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

D.R.Ashok

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அஷோக் தாங்க

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

வேறென்ன... பெரிய தமிழ் வார பத்திரிக்கைகள் போரடிக்க ஆரம்பித்ததால், சுஜாதாவும் இல்லை, அப்புறம் சாரு எஸ்.ரா போரடிக்க ஆரம்பித்தனால்.. வலையுலகில் நல்ல கவிஞர்கள் இல்லாததால்... தேவலோகத்தில் போட்ட மீட்டீங்கில் முடிவெடுத்து.. எல்லோரும் சிவபெருமானிடம் முறையிட.. சிவனும் ஆனந்த தாண்டவம் ஆடி.. இனி மண்ணுலகத்தில் D.R.அஷோக் கவிதைகள் எழுதி ’கொட்டாவி விடும் வலையுலகை’ குத்தாட்டம் ஆட செய்வார் என ரட்சிக்க நானும் கோதாவில் குதிக்க...

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

மவுண்ட்ரொடில் கட்டவுட் வைத்தேன், Times of Indiaல விளம்பரம் கொடுத்தேன்....உண்மைய சொல்லனும்னா.. ஒன்னும் செய்யல..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மனதின் உள் ஓசைகளையும்... கேட்டறிந்த ஓசைகளையும்.... ஒத்திசைவாகத்தான்.. என்னிசையை கோர்கிறேன்..

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல......வாழ்க்கை தந்த நெடிய கசப்புகளில் மூழ்கிபோகாமலிருக்க

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்னே ஒன்னு...

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்- ஏற்பட்டது உண்டு. கோபம்தானே, இப்போ போயிடுச்சு!

பொறாமை – அப்படின்னா..?

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

’சக்கரை’ சுரேஷ், இளைஞர், இப்பொழுது எழுதுவதில்லை. கேட்டால் போரடித்துவிட்டது என்று கூறினாராம்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

என்னை பற்றி:
ஓவியன், நீண்ட பயணங்கள் தேசிய நெடுஞ்சாலையில், ட்ரெடிங் கம்பெனியில் ஹெட்ஜிங் அனலிஸ்டாக(Hedging Analyst) இருக்கிறேன்.


அழைக்க விரும்புவர்கள்:

1. யாத்ரா
2. மண்குதிரை
3. தேணம்மை
4. ஹேமா
5. பத்மா
இந்த லிஸ்டல ஏற்கனவே எழுதியிருந்த உட்ருங்க.. லிஸ்ட்ல விடுபட்ட நண்பர்கள் எல்லாம் எழுதுங்க... நேரம் கிடைக்க சொல்லோ..

11 comments:

D.R.Ashok said...

இவ்வளவு சீக்கரமா பதிவு போட்டுடீங்களே... ரொம்ப சுறுசுறுப்புங்க உங்களுக்கு... :)

velji said...

உடனே நடந்தா ட்ரீட்மெண்ட்.ரொம்ப லேட்டா நடந்தா....?!

சரி..சரி...இன்னும் டென்ஷன் இருக்கு போல.ப்ரீயா வுடுங்க!

ஹேமா said...

நன்றி அஷோக் என்னை தொடருக்கு அழைத்தமைக்கு.ஆனால் நான் எழுதிட்டேன்.நீங்கதான் கவனிக்கல.

நீண்ட நாளுக்குப்பிறகு உங்க பதிவு கண்டு சந்தோஷம்.

வானம்பாடிகள் said...

வாங்க அசோக். இன்னும் கொஞ்சம் அசோக்கை தெரியுது. நன்றி:)

வால்பையன் said...

//என் மனதின் உள் ஓசைகளையும்... கேட்டறிந்த ஓசைகளையும்.... ஒத்திசைவாகத்தான்.. என்னிசையை கோர்கிறேன்..//


அட
அடே
அடடே!

பத்மா said...

ஐயோ நானா ? யாருக்குங்க நான் யார்ன்னு தெரிஞ்சுக்க விருப்பம் இருக்கும்?
எனக்கு இதெல்லாம் எழுத வராதே அசோக் அண்ணன் !!!ஏற்கனவே ஒரு அழைப்பு இருக்கு ..இது இரண்டாவது ..பார்க்கலாம் ..

அது சரி யாராவது எழுதி தருவாங்களா?

க.பாலாசி said...

எப்ப எழுதினா என்னங்க... உங்களப்பத்தி நீங்க சொல்றதுக்கு நேரங்காலம் என்னாத்துக்கு... சுவாரசியமான பதில்கள்...

D.R.Ashok said...

@velji நன்றி :)

@ஹேமா சந்தோஷமா நன்றிஜி

@வானம்பாடிகள் சார் வாங்க

@வால்பையன்
நீங்களாவது நமது கவிநய வார்த்தைகளை தேடிபிடிச்சி சொன்னீங்களே

@பத்மா
//யாருக்குங்க நான் யார்ன்னு தெரிஞ்சுக்க விருப்பம் இருக்கும்?//
//ஏற்கனவே ஒரு அழைப்பு இருக்கு//
என்னே ஒரு contradtictions...
சும்மா எழுதுங்க.. நன்றி ஜி

@க.பாலாசி.. உங்க பதில்தான் சுவாரசியம் :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என்னைக் கூப்பிட்டு இருக்கிங்க .. ஆனா என் கிட்ட சொல்லலையேஅஷோக்..:))

தியாவின் பேனா said...

வாங்க அசோக் நலமா?

D.R.Ashok said...

@தேனம்மை
இதுவரைக்கும் அப்படிதானேஜி?

@தியாவின் பேனா
நலமே... தாங்கள் நலமா?