Tuesday, September 14, 2010

மாப்பிள்ளை ஜோரில் பங்குசந்தை
தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கையில் இப்போதே தலதீபாவளி கொண்டாடும் புதுமாப்பிள்ளையாக பந்தா காட்டுகிறது நம் பங்குசந்தைகள். மே மாதம் பங்குசந்தை வீழ்ச்சி கண்டதும்; அவ்வளவுதான் இனி மீள எத்தனை மாதம் ஆகுமோ என்று வருந்தியவர்களுக்கு ஒரே பாடலில் பணக்காராணாகும் நம்மூர் ஹீரோ போல பங்குசந்தை ஒரு சில மாதங்களிலேயே ஏகத்துக்கும் வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றிருக்கிறது. சந்தையின் இந்த அபார வளர்ச்சி உள்நாட்டு வர்த்தகர்கள் லாபம் அடைந்தார்களா என்றால், ’இல்லை’ என்றே பதில் வரும்.

முதலீட்டாளர்களுக்கு சந்தை விழுந்தாலும் சரி, வளர்ந்தாலும் சரி முதலில் பலன் வந்து சேரும். ஆனால் வர்தகர்களோ சந்தை போக்கு எப்படியிருப்பினும் ஏற்ற-இறக்க அசைவின் அடிப்படையில் பலனை அனுபவிப்பார்கள். சந்தை மேலே சென்றாலும் தின வர்த்தகர்களுக்கு ஏற்ற சூழல் அமையவில்லை. இதில் பெரிதும் லாபம் அடைந்தது FII’s எனப்படும் பண்ணாட்டு அமைப்புசார் முதலீட்டாளர்களே.

அதிபுத்திசாலிகளே நோட் பண்ணுங்க

1. பொதுவாக ஒரு மாதத்துக்கு ஒரு முறையாவது பங்குசந்தை மேலிருந்து கீழ் சென்று திருத்தம் (correction) காணும் ஆனால் நான்கு மாதமாகியும் திருத்ததிற்கான சான்றுகூட இல்லை.

2. சந்தை மேலேறும்போது வியாபார தடங்களான calloption சரி put option சரி ஒரே அளவில் வர்த்தகம் ஆகாது இந்த முறை OPTION வியாபாரத்தில் இரு வாய்ப்பிலும் ஒரே அளவில் பணமும், பங்கும் வர்த்தகமாகிறது.

3. பங்குகள் பலவும் தங்கள் தடைநிலை அருகிலும் தாண்டியும் வர்த்தகமாகின்றன.

4. உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளைவிட அயல்நாட்டு பொருளாதார சூழலை தாங்கியே நம் பங்குசந்தை வளர்கிறது.

இது சந்தோஷமா? இல்லை சங்கடமா?

நம் பங்குசந்தைகளின் இந்த வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சிக்குறியதாய் இருந்தாலும் சந்தையில் தொடர்புள்ளவர்கள் இதை கொண்டாடலாமா அல்லது அமைதி காக்கலாமா? என்று குழப்புகிறார்கள். முன்பு சந்தை 5400 தொட்டதுக்கே சூப்பர் ஸ்டார் பட ரிலீஸ்போல் ஆட்டம் போட்டவர்கள் இப்போது 5800 என்ற இமயத்தை கடந்தும் ஆர்பாட்டமின்றி அடக்கி வாசிக்கிறார்கள். இதற்கு 2008-ஐ போல் நன்றாய் பறந்து புன்னாக்கும் தீபாவளி ராக்கெட்டாய் சந்தை ஆகுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த குழப்பம். இறங்குதோ இல்லையோ கொண்டாட கிடைக்கும் இத்தருணத்தை நழுவ விடாமல் கொண்டாடுவதே புத்திசாலித்தனம்.

எப்போது திருத்தம் (correction)

என்னதான் பாஸிடிவா பேசினாலும் நெகடீவா சந்தைய அனுகியவர்கள் இப்போது அவஸ்தை படுகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவது :P

மாமியார் (அயல்நாட்டு முதலீடு) உபசரிப்பில் மாப்பிள்ளை (சந்தை) பந்தா காட்டினாலும் எத்தனை நாள் தான் உபசரிப்பார் அந்த மாமியார் கல்யாண பந்தியில் நேரம் நீண்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தி முடிக்கப்பட வேண்டும். அதுபோல சந்தையில் இந்த சக்கைபோடும் விரைவில் அடங்கும். சந்தையில் செய்தியின்மை, ஆவல், அயல்நாட்டு முதலீடு, அதிக பணப்புழக்கம் போன்றவையாகச் சந்தை ஏறியது விரைவில் இந்த சூழல் எதிர்வினையில் அமையப்போவதால் சந்தை நன்றாக கீழிறங்கும். தாங்கு நிலைப்பற்றிய முரண்பாடு நிலவினாலும் தேசிய பங்கு சந்தை குறுகிய காலத்தில் 5200-ஐ தாங்கு நிலையாகவும் 5950 தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகமாகும்.

கட்டுரை உதவி: சிவசங்கர்

9 comments:

ஹேமா said...

அட....அதிசயம்.
இண்ணைக்கும் ஒரு பதிவு.
தேவையானவர்களுக்குப் பிரயோசனம்.

நகைச்சுவை said...

மாப்பிள்ளை ஜோரில் பங்குசந்தை:)


ஆஹா அருமையான தலைப்பு வர்த்தகர்களுக்கு தேவையான கட்டுரை

தொடர்ந்து வர்த்தகர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கவும்

D.R.Ashok said...

தொடர்ந்து வந்து ஊக்குவிக்கும் ஹேமாஜிக்கு நன்றி... உங்களுக்காகவே கடை நடத்தாலம் போல :)

நகைச்சுவை.. நன்றி... கண்டிப்பா செய்றேன்.. சந்தேகங்களை கேட்கலாம் :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பங்குச் சந்தை பற்றி அருமையான பகிர்வு அஷோக்..:))

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

D.R.Ashok said...

தேனம்மை
நன்றிஜி.. நீங்களும் நல்லாவே எழுதியிருந்தீங்க, மகிழ்ச்சி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

Anonymous said...

//அருமையான பகிர்வு//
Radhakrishnan sir, romba naal thoongiteengala? :)

D.R.Ashok said...

@நன்றி டிவிஆர்

@ஆனானி யாருப்பா அது?