Saturday, October 2, 2010

எந்திரன் - ஒரு சிறிய பார்வைஒரே கதையை வைத்து பல படங்கள் பண்ணிய ஷங்கர் இதில் I-Robot-ன் இன்ஸ்பேரேஷனில், இவர் ஸ்டைலில் படம் செய்து இருக்கிறார்.
Second half-ல் கலாபவன்மணியின் கண்களில் மண்ணைதூவிட்டு ஓடிவந்து மூச்சிறைக்கிறார்கள் கதையின் நாயகனும் நாயகியும்... அங்கே தான் படமும் மூச்சிரைக்க ஆரம்பிக்கறது. அங்கே தொடங்கியது வில்லன் ரஜினி ‘ரோபோ’ என்னும் வரையில் நம்மை வறுத்துதெடுக்கிறார்கள். முதல்பாதியில் உள்ள வேகம் இரண்டாவது பாதியில் இல்லை. ஷங்கரின் அடுத்த படம் மிகவும் போர் அடிக்கும்... இது எனது சொந்த கணிப்பு.
பாப்கார்ன் 70ரூ அது தியேட்டர் முழுக்க சிதறிகிடக்கிறது... 70 ரூபாய் என்பது ஒரு அடிதட்டு மக்களின் ஒரு நாளைய குடும்ப சாப்பாட்டு செலவு. படத்துக்கு நான் செய்த செலவு 1350... மூன்று பேருக்கு. இதுவும் அ.த.மக்களின் பாதிமாதச்செலவு. (ஷங்கர்தான் கருத்து சொல்லனுமா நாங்க சொல்லமாட்டோமா?)
Interval விட்டவுடன் என் பையன் ‘அப்டியே சுடனும்போல இருக்கு’ என்றான்... ஏன் என கேட்க ... Interval விட்டவங்களையான்.. அந்த அளவுக்கு interesting, informative, dialogues, speed.. in first half. தமிழுக்கு எல்லாம் புதுசு. ஒரு டிக்கெட் விலை 300.. அது first halfகே கொடுக்கலாம்... அப்புறம் அம்புடுதேன்...

இந்த படதிற்கு மீடியா கொடுத்த ஹைப் இருக்கே சொல்லிமாளல.. முக்கியமா NDTVHINDU, Sun Network, NDTV Profitல கூட ... என்ன கொடுமை சரவணா இது...

தலைவர பஞ்ச டயலாக் பேசவுட்டு... பல ஸ்டையல்கள காட்டியிருந்தா பின்னால் வரும் தோய்வை சரிகட்டியிருக்கலாம்... கமலா தியேட்டர் screen 2ல காத பஞ்சர் ஆக்கிட்டாங்க...


காலைல 5.30 மணிக்கு இரண்டு தியேட்டரில் டிக்கெட் இருந்தும் நான் தூங்கியது கண்டு என்னை நானே மெச்சிக்கொண்டேன்... கடைசியில் ஈவினிங் ஷோக்கு என்னிடம் வேலை பார்க்கும் தம்பி டிக்கெட்டை கையில் வந்து கொடுத்தான்... அடித்தது எந்திரனுக்கு யோகம்.

ஓம் சாந்தி ஓமில் வருவது போல கடைசியில் பங்குபெற்றவர்களை visual treatடாக கொடுத்துயிருக்கலாம்... மணிரத்தினம் படம்போல பெயர்களை போட்டு போரடித்தார்கள்.

தலைவருக்கு கழுத்திலிருந்து உடை அணிவித்துயிருக்கிறார்கள். காரணம் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். ’ஜஸ்’ லாலாக்கு டோல் டப்பிமா போலியிருக்கிறார்... இரண்டு வயதானவர்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் எவ்வளவு கஷ்டப்பட்டியிருப்பார் என்பது புரிகிறது.

சாபுசிரிலை International criminalகளின் transilator ஆக்கியிருக்கிறார்கள்... இரண்டு சீணுக்கு வந்து போனாலும் பாந்தம். கலாபவன்மணி வீணடிக்கப்பட்டுள்ளார். லிஸ்ட்டில்.. கருணாஸ் சந்தாணம் சேர்த்துக்கொள்ளலாம். படம் முழுக்க திகட்ட திகட்ட ரஜினி.

Second half bore, first half nonsense to the core.. superb..
வழக்கம்போல குடும்பத்தோட ரசிக்கலாம்.

6 comments:

D.R.Ashok said...

சூப்பர்டா அஷோக் கதை சொல்லாமலேயே விமர்சனம் எழுதியிருக்கியே :)

ஹேமா said...

சரிதான் அஷோக்....உங்களை நீங்களே பாராட்டி ஒரு பின்னூட்டமா !படத்தை அவ்ளோ ரசிச்சிருக்கீங்க.

D.R.Ashok said...

இதுவரைக்கும் 80 பேர் படிச்சுயிருக்காங்க.. நீங்களாவது பின்னூட்டம் போட்டீங்களே.. நன்றி ஹேமாஜி :)))

Shakthiprabha said...

//தலைவர பஞ்ச டயலாக் பேசவுட்டு... பல ஸ்டையல்கள காட்டியிருந்தா பின்னால் வரும் தோய்வை சரிகட்டியிருக்கலாம்... //

நம்ம ஜனங்களை புரிஞ்சுக்கவே முடியலைப்பா. தாதாவா இருந்து பஞ்ச் டையலாக் பேசினா திகட்டுதுங்கறாங்க. ஆனா விஞ்ஞானி பஞ்ச் டையலாக் பேசலையேன்னு வருத்தப் படறாங்க...என்னவோ போங்க.

//’ஜஸ்’ லாலாக்கு டோல் டப்பிமா போலியிருக்கிறார்... //

குப்புற படுத்து யோசிச்சா கூட "லாலாக்கு டோல் டப்பிம்மா" ன்ன என்னன்னுபுரியல. நமக்கு பொது அறிவு கம்மி :((

//இரண்டு வயதானவர்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் எவ்வளவு கஷ்டப்பட்டியிருப்பார் என்பது புரிகிறது.//

:)))

Shakthiprabha said...

//சூப்பர்டா அஷோக் கதை சொல்லாமலேயே விமர்சனம் எழுதியிருக்கியே :)//

முதல் கமெண்ட் நீங்களே வா :)))

D.R.Ashok said...

@shakthiji
இரண்டாம் பாகம் தோய்வை ரோபோ ரஜினியை வைத்து பந்தா காட்டியிருக்கலாம்.. அதான் சொல்லவந்தேன்..

டப்பி... எனபது டப்பா எனும் சொல்லிலிருந்து மருவி வந்த ஒரு அழகு தமிழ்ச்சொல்..:))

டப்பா என்பது மிகவும் ஒல்லியை குறிப்பது,தமிழர்களுக்கு டப்பிமாக்களை பிடிப்பதில்லை ;)

முதல் கமெண்ட்: அது நமக்கு நாமே உதவி திட்டம் :)

வந்து வூடு கட்னதுக்கு நன்றிங்கோ