Sunday, November 29, 2009

பிடித்த 10 பிடிக்காத 10




நண்பர் கேபிள் சங்கர் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.
1.அரசியல்வாதி

பிடித்தவர் : கலைஞர்(அரசியல் சாணக்கியம்) & திருமாவளவன் (இவரின் தமிழ்பேச்சு அதி அற்புதம்)(வைகோவும் இந்த லிஸ்டில் சேரவேண்டியவர்..ஆனால் சாரி .. காரணம் உங்களுக்கே தெரியும்)
பிடிக்காதவர்: ஜெயலலிதா, Dr.கிருஷ்ணசாமி(கமல் போன்ற கலைஞனை கலாய்த்தற்காக, மற்றும் நம் கலாச்சாரத்தில் உதட்டில் முத்தமிடக்கூடாது என்று உளறியதற்காக) & சுப்ரமணியசாமி (காமெடிதான்)
2. நடிகர்
பிடித்தவர் : வாழ்வே மாயம் கமல்ஹாசன், கார்த்திக் (அக்னி நட்சத்திரம்), டெல்லிகணேஷ் (டௌரி கல்யானம்)
பிடிக்காதவர் : மன்சூர் அலிகான், பிரஷாந்
3. உணவு
பிடித்தவை : சாம்பார், ரசம், மோர், இட்லி, தோசை, மட்டன் மற்றும் செட்டிநாடு உணவுவகைகள்.
பிடிக்காதவை : எண்ணெய் அதிகம் கலந்ததும், காரமும் உள்ள பண்டங்கள் அனைத்தும்.
4. இயக்குனர்:
பிடித்தவர் : பாலா, மிஷ்கின், வசந்தபாலன், மணிரத்னம், பாலாஜிசக்திவேல், பாலசந்தர், ருத்ரைய்யா, விசு, பாரதிராஜா,
பிடிக்காதவர் : பேரரசு
5. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா (குறையொன்றும் இல்லை என்று வேலைக்கொடுத்தினால்)
பிடிக்காதவர் : சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)
6. எழுத்தாளர்
பிடித்தவர் : தி.ஜா, ஜி.நா, சுஜாதா(rulesa மிறினாலும் இவங்கள விடமுடியாது), பாலகுமாரன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் & துணையெழுத்து)
பிடிக்காதவர் : நிறைய இருக்கு
7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ், எம்.எஸ்.வி
பிடிக்காதவர்: சாய்ஸ்ல விட்டுறலாமே
8. ஓளிப்பதிவாளர்:
பிடித்தவர் : சந்தோஷ்சிவன் & P.C.ஸ்ரீராம்
பிடிக்காதவர் : மொக்கையாய் ஒளிப்பதிவு செய்யும் எல்லோரும் (ஹிஹி கேபிளை வழிமொழிகிறேன்)
9. காமெடியன்:
பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், கர்ணாஸ்
பிடிக்காதவர் : விஜய T.ராஜேந்தர்
10. பதிவர்
பிடித்தவர் : R.P.ராஜநாயஹம்
பிடிக்காதவர் : D.R.அஷோக் (எல்லாம் ஒரு வெளம்பரம்.....)
ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

1. யாத்ரா

2. மண்குதிரை

3. Shakthiprabha

4. Karthikeyan G

5. என்.விநாயக முருகன்

19 comments:

யாத்ரா said...

நல்ல பட்டியல் :)

Beski said...

என்னது? டி.ராஜேந்தர் காமெடியனா? அவரோட கண்னப் பாத்து சொல்லுங்க, மூஞ்சப் பாத்து சொல்லுங்க...

பா.ராஜாராம் said...

எனக்கும் திருமாவளவன் ரொம்ப பிடிச்ச பேச்சாளர்.மிஸ் பண்ணிட்டேன் மகனே.பேச்சாளர் மட்டும்.

மற்றதெல்லாம் கலக்கல்ஸ்.

கலையரசன் said...

அருமையான பிபி அசோக்கு!
உங்களுடைய லொள்ளு தாங்கலையே.. டி.ராஜேந்தர் உங்களுக்கு காமெடி பீஸாகிட்டாரா? ரைட்டு!!
4 பேரை கூப்பிட சொன்னா, 5 பேரை கூப்பிட்டுட்டீங்களே..

Raju said...

டி.ஆரை போய் கமெடியன்னு சொல்லீட்டீங்களே..!

Cable சங்கர் said...

பிடிக்காதவர் சரவணபவன் அண்னாச்சியா... யோவ் உனக்கேன் இந்த் காண்டு.. ...இருக்கறவன் அள்ளி முடியறான்.:)

ஜெட்லி... said...

//சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)
//

பல் இருக்குறவன் பகோடா
சாப்பிடுறான்... என்ன இவரு
கொஞ்சம் அதிகமா சாப்பிடுராறு
போல.......

க.பாலாசி said...

//உணவு
பிடித்தவை : சாம்பார், ரசம், மோர், இட்லி, தோசை, மட்டன் மற்றும் செட்டிநாடு உணவுவகைகள்.//

நீங்கதான் நம்ம ஆளு....

பதில்கள் பிடித்தமாய்த்தான் இருக்கு....

Karthikeyan G said...

nice..

ப்ரியமுடன் வசந்த் said...

//சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)
//

இருக்குறவன் வச்சுக்குறான்
இல்லாதவன் வரைஞ்சுக்கிறான்
:))))

விநாயக முருகன் said...

//பிடிக்காதவர் சரவணபவன் அண்னாச்சியா... யோவ் உனக்கேன் இந்த் காண்டு.. ...இருக்கறவன் அள்ளி முடியறான்.

:) :)

தேங்க்ஸ் தல. நானும் பிடித்த பத்தை பதிவு செய்துள்ளேன்

Karthikeyan G said...

Sir, அழைத்தமைக்கு மிக்க நன்றி. T10 பதிவு போட்டாச்சு.

ஹேமா said...

அஷோக் கிட்டத்தட்ட என் ரசனைதான் உங்களுக்கும்.ஆனா உங்களை உங்களுக்கே பிடிக்கலனா எப்பிடி !"எண்ணெய் காரம் தவிர்"

Anonymous said...

சுவாரஸ்யமே இல்லையே ராஜா.

திகேயன்

Ashok D said...

@ ஜெட்லி
பகோடாவிடுங்க.. தூள்கூட நம்மக்கு கிடைக்கமாட்டேங்குது..

@ க.பாலாசி
நம்மயெல்லாம் ஒரே ஆளுதான் பாலாசி

@ ராஜு
எனக்கு அவரு அப்டிதான் தெரிறாரே ராஜீ

@ கேபிள் சங்கர்
கரெக்டு தான் தலைவரே! காண்டுதான்..

@ யாத்ரா
பட்டில் விஷ்னுவர்த்தன் படம்ல்ல..? :)

@அதி பிரதாபன்
அவரு கண் மூஞ்ச பாத்த பிறகு தான் சொல்லறன் அதி ;)

@ பா.ராஜாராம்
பேச்சாளர் மட்மில்ல சித்தப்ஸ் அவரு பேச்சளரும்கூட (ஆஹா என்னா ரெய்மிங்ஸு)

@ கலையரசன்
ரூல்ஸ மீறனும் அதானே பொதுவிதி கலை.

@ வசந்த்
:))))

@ Karthikeyan G
ரெய்ட்டு

@ என்.விநாயகமுருகன்
:)

@ ஹேமா
இரண்டுபேருக்கும் ஒரே ரசனையா ஹேமா.. ரொம்ப ச்ந்தோஷம்.
அதான் வெளம்பரம்னு பிராக்ட் பண்ணிட்டேனே :)

@ திகேயன்
கு.கு.!? 5 நிமிஷத்தில எழுதினது பின்ன எப்படி இருக்கும் அனானி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//பிடிக்காதவர் : விஜய T.ராஜேந்தர்///


அடப் பாவமே! ஒரு காலத்துல கலக்கல் lyricist :(

///பிடித்தவை : இட்லி, தோசை, //

நமக்கும்! :)

//பிடிக்காதவை : எண்ணெய் அதிகம் கலந்ததும், காரமும் உள்ள பண்டங்கள் அனைத்தும்.
//

hehehe :)

//தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா (குறையொன்றும் இல்லை என்று வேலைக்கொடுத்தினால்)

கலக்க்கிட்டீங்க :)

//பிடிக்காதவர்: ஜெயலலிதா//

:P

அப்புறம் ஹாரிஸ் ஜெயராஜ், பி.சி.ஸ்ரீராம் இப்டி பல விஷயங்களுக்கு, நான் சொல்ல வருவது

"cool choice" :)

நல்ல தொடர் பதிவுங்க. என்னை அழைத்ததற்கு நன்றி. நானும் பதிவிட்டுவிட்டேன் :)

Prathap Kumar S. said...

//பிடிக்காதவர் : விஜய T.ராஜேந்தர்//

என்னைப்பிடிக்காதுன்னு சொன்னாது யாரு? நான் யாரு டி.ஆரு? என்னைபிடிக்கும்னு சொல்லு இல்ல உடைஞசிடும் உங்க பல்லு... ஏய் டண்டனக்கா...

////சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)//

அதுல உங்களுக்கு என்ன சார் அவ்ளோ வருத்தம்... :-)
அதான் தலைவரு இப்ப கம்பி எண்ணுறாரு... பணம் இருக்குன்னு ரொம்ப ஆடுன்னா இப்படித்தான்...

Anonymous said...

@ திகேயன்
கு.கு.!? 5 நிமிஷத்தில எழுதினது பின்ன எப்படி இருக்கும் அனானி.

தம்பி அதென்னா கு,கு ?!- கருத்தை சொன்னா குமட்டில் குத்துவேன் என்கிறாயா ? இல்லை குடும்பக் குட்டுப்பாடு மாதிரி எதுக்காவது அப்ரிவேஷனா ?

திகேயன்

Ashok D said...

@ Shakthiprabha
'இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்டு புதிய தம்பூராவை மீட்டிச்சென்றாள்’ என எழுதும் டி.ஆர் ‘தட்டிப்பார்த்தேன் கொட்டாகுச்சி’ன்னும் எழுதுவார். என்னக்கொன்னவோ அவரது நடிப்பும் சில் இத்தியாதிலும் அவரை காமடியாகதான் :)
ஜெயலலிதாவ எனக்கு பிடிக்கும்தான் ஆனால் அவர் செய்த சில விஷயங்கள் கொஞ்சம் நெருடலே.
நன்றி shakthi.

@ நாஞ்சில்பிரதாப்
பிரதாப், thanks for ur first visit & தடாலடி கமெண்டுக்கும் ;)

@ தியாவின் பேனா
எனக்கு இந்த ஆவார்டை எப்படி இந்த தளத்தில் நிறுவதெல்லாம் தெரியாது. எனக்கு ப்ளாக்கை வடிவமைத்து கொடுத்து தமிழ்மனம், தமிலிஷ்யெல்லாம் இணைத்துக்கொடுத்தே நண்பர் கேபிள்சங்கர் தான். நன்றி உங்கள் அன்பிற்க்கும் விருதுக்கும் தியா.

ஏற்கனவே விருது கொடுத்த விதூஷும் புரிந்துகொள்வார் என்று எண்ணுகிறேன் :)

@ திகேயன்
அது என் நண்பரின் பெயர் சுருக்கம்(குப்புக்குட்டி), அவர்தானோ நீங்களென்று எண்ணிவிட்டேன் :P