Saturday, November 7, 2009

வேணாம்டி விட்று

மழையில் நனைந்தோடும் பெண்கள்
அழுக்கேறும் மனம்

மெல்ல நுழைந்து டிராகனைபோல்
தலைதூக்கும் காமம்

நியாபக செதில்களில்
பட்டுத் தெறிக்கும்
பிரிவுகளின் கொடூரவழித்தடங்கள்
மழை நாட்களில்

மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்

நல்லது, பொல்லாதது,
நேர்மையற்றது, வினோதம்,

பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்

41 comments:

ஈரோடு கதிர் said...

//பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே//

ha ha ha

Ashok D said...

@ கதிர்-ஈரோடு
நனறி சார், :)

பா.ராஜாராம் said...

வாவ்!மகனே...ரொம்ப பிடிச்சு இருக்கு!

//நியாபக செதில்களில்
பட்டுத் தெறிக்கும்
பிரிவுகளின் கொடூரவழித்தடங்கள்
மழை நாட்களில்மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்//

கவிதை...கவிதை!

Ashok D said...

@ பா.ராஜராம்

சித்தப்ஸு என்ன பாராட்றத உன் வேலையா போச்சு..ம்ம்ம்.. நடத்துங்க.. :)

பா.ராஜாராம் said...

நான் இங்கிருக்கிறேன்.நீங்கள் அங்கிருக்கிறீர்கள்...அலையவிடாதீகப்பு அப்பனை.மணிஜி இன்ற உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.மேகம் கருக்க விட மாட்டேங்கிறாரு.மூடிய திறந்த கையோடு ஒரு போன்....நமக்கு வயிறு எறியும்!...மகனே..உங்கள் மின் முகவரி வேணும்.

Ashok D said...

@ சித்தப்ஸ்

ashokspeed@gmail.com

ஹேமா said...

//பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்//
அஷோக் இரண்டையும் ஒப்பிட்ட விதம் அருமை.

நானும் ஆங்.. ரைய்ட்டு.....சொல்லிட்டுப் போகவா !

அசோக் எப்பிடி என் அண்ணா உங்களுக்குச் சித்தப்பா ஆகலாம் !

கலையரசன் said...

இன்னம்.. இன்னம்.. கொஞ்சம் அதிகமா எதிர்பாக்குறேன் உங்ககிட்ட..!

creativemani said...

"வேணாம்டி விட்று"
உட்கார்ந்து யோசிப்பீங்களோ?!?!?!
:)

Cable சங்கர் said...

//பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்//

நிஜமே..:)

மணிஜி said...

உண்மையிலேயே நல்லாயிருக்கு அஷோக்...அப்புறம் ஹேமா கேள்விக்கு என்ன பதில்?

Anonymous said...

என்ன அருமையான் சிந்தனை !!! அட அடா அற்புதமா இருக்கு !!

பின்னூடத்தில் எப்படிடா இத்தன கவித்துவமாவும் காமெடியாவும் இந்த ஆளு பின்னுறாறு என்று நினைப்பேன், இப்படி அற்புதாமன கவிதை செதுக்குபவருக்கு இதெல்லாம் போஅகிற போக்கில் வந்திடாதா ஏன்னா ?

அடாடா !!! படிக்க படிக்க சர்க்ரையா இருக்கு. என்ன வரிகள் என்னமாய் போதிந்திருக்கு நக்கல், பிரமாதம் !!!!!!! இன்னும் எத்ததனை தடவை படிக்க போகிறேனோ

குப்புக் குட்டி

Ashok D said...

@ ஹேமா

தலைப்பையும் இரண்டுடன் ஒப்பிடலாம்.

வார்த்தைகளில் ஜாலம் செய்யுங்கள்.பின்னூட்டங்களால் அலங்கரிக்கிறேன் ஹேமா.

சகோதரி அல்லது சித்தி என்றுக் கொச்சைபடுத்தமாட்டேன். நீங்கள் என் தோழியே :P

@ கலை

கலை, வார்த்தைகளை சிறுத்து அர்த்தங்களை மிதக்க விடுவது தான் கவிதையே.. :)

@ அன்புடன் மணிகண்டன்

தோழி அவள் வீட்டில் வேலைசெய்யும் பெண்ணிடம் கூறிய வார்த்தை, சட்டென எடுத்துக்கொண்டேன்.

@ கேபிள் சங்கர்

//நிஜமே..:)//
என்னாது தலைவரே.. அந்த கிசுகிசுவா?

@ தண்டோரா
தலைவரே, இப்பவாது நான் கவிஞன்னு ஒத்துகிட்டா சரி :)

@குப்புக்குட்டி

உங்கள் பின்னூட்டம் மனநிறைவை கொடுத்தது. நன்றி குப்புக்குட்டி.
ஆனாலும் நான் கத்துக்குட்டி.(ஹிஹி)

வால்பையன் said...

//மழையில் நனைந்தோடும் பெண்கள்
அழுக்கேறும் மனம்//

ஆமா தல!
இந்த மழை ரொம்ப தான் படுத்துது!

Ashok D said...

@ வால்பையன்

ரொம்ப ரொம்ப வால்

மண்குதிரை said...

//பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்//

:-)

romba nalla irukku mozhi

Anonymous said...

G.Karthik pathil itta pinnoottam

தமிழர்களிடம் மற்றும் பொதுவாக இந்தியர்களிடம் இருக்கும் பெரிய குறையே தன்னம்பிக்கை இல்லது இருப்பது தான், தான் ரொம்ப மட்டமானவன் தான் பாராட்டுக்களுக்கு லாயக்கே இல்லை என நினைதுகொள்வதுதான் பிரச்சனை.

எத்தனை தகுதி இருந்தாலும் அடக்கமா இருக்கேன் பேர்வழி என்று மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்வார்கள்.

புரூஸ்லீயுடன் கம்பேர் செய்ததால் ரஜினி படத்தின் சண்டைகள் குப்பை தான். ஆனால் அவர் ரசிகர்களுக்கு ஒருசாராருக்கு அதைப் பற்றி தெரியாமல் தலைவன ரசிப்பார்கள் மற்றசிலருக்கோ புருஸ்லீ என்ன வேணா செய்யட்டும் என் தலைவன் பண்ற பைட் தான் டாப் என்பார்கள்.

நடிகர் ரஜினிக்கும் இது தெரியும். தன்னுடைய அளவுகோலில் ரசிகர்களையும் அவர்கள் பாரட்டையும் பர்த்தரேயனால் கண்ணுல ரத்தம் வர்ற வரைக்கும் அழுவதைத் தவிர வேற வழியில்லை.

இத்தனை அதிரடி கவிதைகள் எழுதுகிறீர்கள் ஆனால் "இரண்டு" படத்தில் வடிவேலு -வின் மனநிலையில் இருக்கிறீர்கள். ( நம்ம magic show தான் நல்லா இருக்காதேடா)

பல குப்பைக் கவிதைகளை கடந்து ஒரு நல்ல கவிதையை பார்ர்க்கும் போது , பாராட்டத் தோனுது நீங்க என்னன்னா நாம் கடைசி பெஞ்ச் ஆளாச்சே நமலை போய் இவ்வளவு பராட்டுராரே என்று பதறி

அசிங்கம் அசிங்கம் அபிராமி அசிங்கம் என்று குணா மாதிரி அறையைச் சுற்ற ஆரம்பித்து விட்டீர்கள். கூச்ச சுபாவம் தகுதி அல்ல குறை.

D.R. அசோக் அப்படியல்ல தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகம். தன்னுடைய படைப்புக்கு பாரட்டு வரும் போது இருகரம் நீட்டி வரவேற்கிறார். கோணிக் குறுகாமல் நிமிர்ந்து நிற்கிறார்.

தன்னுடைய படைப்பின் மீது தனக்கே நம்பிக்கை இல்லாவிடால் எதற்காக பொதுவில் எழுத வேண்டும் ? ஒரு பழைய பால் கணக்கு டைரி போதுமே .

(கோபபடாத) குப்புக் குட்டி

Ashok D said...
This comment has been removed by the author.
Karthikeyan G said...

அசோக் சார், இப்டி ஒரு ரசிகர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அஹா.. குப்புக் குட்டி மட்டும் blog ஆரம்பித்தால் அடுத்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அவருக்கு "சிறந்த தமிழ் வலை எழுத்தாளருக்கான" நோபெல் பரிசு கண்டிப்பாக கிடைக்கும். Blog ஆரம்பிக்காவிட்டாலும் கூட இந்த கமென்டுகளுக்காக அவருக்கு இந்த பரிசு கிடைக்கும்.

தனது அறிவுரைகளை எவ்வளவு அருமையாய் சொல்லியிருக்கார். தென்கச்சி.கோ.சாமிநாதனுக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பக் கூடிய திறமை குப்புகுட்டிக்கு மட்டுமே உண்டு.

அளவில்லா அன்புடன்,
கார்த்தி

Ashok D said...

@ மண்குதிரை

மொழி நல்லாயிருக்கா. ரொம்ப நன்றி நண்பா. correctionsயிருந்த நீ எனக்கு தெரிவி.

@ கார்த்திகேயன்.ஜி

இது கொஞ்சம் கூட நல்லாயில்ல. என் கவிதைக்கு பின்னூட்டமிடமா.. பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிட்டுயிருக்கிறாய். உன்(மண்குதி&யாத்ரா) கமெண்டை ஆவலுடன் எதிர்பார்ப்பேன் எப்போதும்.

Karthikeyan G said...

கவிதை நல்லா இருக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

//மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்//

வார்த்தைகள் விளையாடுகின்றன அசோக்கிடம்..

அழகுப்பா..

வீணாபோனவன் said...

இந்த கவிஜ :-) ஏடாகூடமா இருக்குதப்பா :-) வால்பையனின் பக்கத்தில் என்னை திட்டியதற்கு ரொம்ப நன்னி.

-வீணாபோனவன்.

க.பாலாசி said...

//மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்//

arumaiyana solladal. muzhu kavithaiyum arumai.

konjam letta vanthalum kavithaiyin azhagil maatram illai.

Ashok D said...

@ கார்த்திகேயன் ஜி
நன்றி ஜி ;)

@ வசந்த்
நன்றிப்பா.. :)

@ வீணாபோனவன்
ஒரு கமெண்ட் போட வைக்க என்னா பாடுபட வைக்கிறீங்க. நான் எங்க திட்டனன், நல்லாயிருங்கன்னு தானே சொன்னேன் :P

@ பாலாசி
கவிதையெழுதுதென்னவோ சொற்பநேரம்தான். ஆனால் அந்நேரம் வர பல நாட்களாகிறது.ஏனெனில் வாழ்வு துரத்துகிறது. நன்றி பாலாசி

Anonymous said...

//தனது அறிவுரைகளை எவ்வளவு அருமையாய் சொல்லியிருக்கார்//

குறைகளை மறைத்து மற்றவர்களின் நிறைகளைப் பெரிதாக்கி பாராட்டுவது என் குணம். உங்களைப் பாராட்டுனதுக்கு, உழைப்பாளி படத்தில் பஞ்சு மிட்டாய் காரனிடம் சிக்கிய கவுண்டர் நிலைக்கு என்னை ஆளாக்கிட்டீங்களே !!

பிரமிள் கவிதைகளை போல் தோற்றம் தருகிறது என்று சிலர் சொன்னாதால், இப்படி உழல்கிறீர். என் பார்வையில் உங்கள் கவிதையை பிரமிள் கவிதையுடன் ஒப்பிட எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் சரி , பூவை புஷ்பம்னு சொல்லலாம் நீங்க நினைகிறமாதிரியும் சொல்லலாம்


உங்களுக்கு நான்
எந்த இடத்திலும் அட்வைஸ் செய்யவில்லை. பாராட்டு சொன்னவரை அவமதிக்கலாகது என்று இடித்து உரைத்தேன் அவ்வளவே. தென்கச்சியார் ஒரு சிறந்த ஆர்பாட்டம் இல்லாத பேச்சாளர். அவர் உரையில் அட்வைஸ் ஏதும் நான் கண்டதில்லை.

//செம்மொழி மாநாட்டில் அவருக்கு "சிறந்த தமிழ் வலை எழுத்தாளருக்கான" நோபெல் பரிசு கண்டிப்பாக கிடைக்கும்.//

இதை படித்ததும் பின்லேடனின் அட்ரஸ் கேட்டவரிடம் வடிவேலு பேசும் "இந்த அவனாடா நீ ................" என்ற டயலாக் நினைவுக்கு வந்து தொலைத்தது. அளவுடன் உளறுங்கள். நோபல் என்றால் என்ன என்று கூகிள் -லில் தேடி படிக்கவும் (இது கண்டிப்பா அட்வைஸ் தான் )

முகம் தெரியாத நபரிடம் கோபம் பாரட்ட ஏதுமில்லை
இந்தப் பின்னூட்டத்தில் சிறிது எள்ளல் உண்டு ஆனால் கோபம் கிடையாது இதுவே எனது கடைசி எதிர்வினை. நல்லதோ கேட்டதோ ஏதும் நான் இடப் போவதில்லை

மறக்க மன்னிக்க !!

(கோபப்படாத) குப்புக் குட்டி

Karthikeyan G said...

Ha ha ha..

Now its my time to give some mokkai advice to you.. Take this..

தமிழர்களிடம் மற்றும் பொதுவாக இந்தியர்களிடம் இருக்கும் பெரிய குறையே தன்னம்பிக்கை இல்லது இருப்பது தான், தான் ரொம்ப மட்டமானவன் தான் பாராட்டுக்களுக்கு லாயக்கே இல்லை என நினைதுகொள்வதுதான் பிரச்சனை.

எத்தனை தகுதி இருந்தாலும் அடக்கமா இருக்கேன் பேர்வழி என்று மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்வார்கள்.

புரூஸ்லீயுடன் கம்பேர் செய்ததால் ரஜினி படத்தின் சண்டைகள் குப்பை தான். ஆனால் அவர் ரசிகர்களுக்கு ஒருசாராருக்கு அதைப் பற்றி தெரியாமல் தலைவன ரசிப்பார்கள் மற்றசிலருக்கோ புருஸ்லீ என்ன வேணா செய்யட்டும் என் தலைவன் பண்ற பைட் தான் டாப் என்பார்கள்.

நடிகர் ரஜினிக்கும் இது தெரியும். தன்னுடைய அளவுகோலில் ரசிகர்களையும் அவர்கள் பாரட்டையும் பர்த்தரேயனால் கண்ணுல ரத்தம் வர்ற வரைக்கும் அழுவதைத் தவிர வேற வழியில்லை.

இத்தனை அதிரடி பின்னூட்டங்கள் எழுதுகிறீர்கள் ஆனால் "இரண்டு" படத்தில் வடிவேலு -வின் மனநிலையில் இருக்கிறீர்கள். ( நம்ம magic show தான் நல்லா இருக்காதேடா)

பல குப்பைக் பின்னூட்டங்களை கடந்து ஒரு நல்ல பின்னூட்டத்தை
பார்ர்க்கும் போது , பாராட்டத் தோனுது நீங்க என்னன்னா நாம் கடைசி பெஞ்ச் ஆளாச்சே நமலை போய் இவ்வளவு பராட்டுராரே என்று பதறி

அசிங்கம் அசிங்கம் அபிராமி அசிங்கம் என்று குணா மாதிரி அறையைச் சுற்ற ஆரம்பித்து விட்டீர்கள். குப்புக் குட்டி உங்கள் கூச்ச சுபாவம் தகுதி அல்ல குறை.

தன்னுடைய படைப்பின் மீது தனக்கே நம்பிக்கை இல்லாவிடால் எதற்காக பொதுவில் எழுத வேண்டும் ? ஒரு பழைய பால் கணக்கு டைரி போதுமே.


(பதற்றப்படாத) கார்த்திகேயன்.

anujanya said...

நல்லா இருக்கு அசோக். இறுதி வரிகள் நச்.

அனுஜன்யா

vinthaimanithan said...

//வேணாம்டி விட்று//

ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

//பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்//

உண்மை... உண்மை...

கலக்குறீங்க தலைவா

Anonymous said...

என்ன கண்ணு கார் திகேயன் , பின்னூட்டத்தைக் கூட சொந்தமா எழுத மாட்டியோ ? அதையும் டிங்க்க்ரிங்க்க் பட்டி பார்த்து ரிலீஸ் பண்ணா எப்படி ?

Ashok D said...

@ கார்த்திகேயன் & குப்புகுட்டி

உங்கள் இருவரின் பகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தலுக்கும் நன்றி. குப்புகுட்டி நீங்கள் குப்பன்யாஹுவா?

@ அனுஜன்யா

நன்றி ஜி, எனக்கும் ரொம்ப பிடித்த வரி. கொஞ்சம் try பண்ணா பெரிய கவிஞனாகிடுவேனோ? :P
தொடர்ந்து வந்து போங்கங்க.

@ விந்தை மனிதன்

ரொம்ப நன்றிங்க :)

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு அசோக்.

விநாயக முருகன் said...

பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்

இந்த வரிகளை ரசித்தேன் நண்பா

Ashok D said...

@ யாத்ரா
நன்றி என் பிரிய கவிஞனே

@ என்.விநாயகமுருகன்
நன்றிங்க சார்.. இப்பவாவது எங்க அட்ரஸ் உங்களுக்கு தெரிஞ்சுதே :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

கலக்கல்! வாழ்த்துக்கள்.

//நியாபக செதில்களில்
பட்டுத் தெறிக்கும்
பிரிவுகளின் கொடூரவழித்தடங்கள்
மழை நாட்களில் மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்
//

இந்த வரிகள் மிக ஆழமானவை.

Ashok D said...

@ நன்றி Shakthiprabha

எனக்கு மிகவும் பிடித்த வரிகள். ஆழ்மனதின் பிறிடல்தான் அவை.

இப்பொழுது படிக்கையில் நானா எழுதினேன் என்று எண்ண வைத்து கண் சிமிட்டும் வார்த்தைகள் இவைகள் :)

அடலேறு said...

ரசனை கவிதை அசோக். வாழ்த்துக்கள்

Ashok D said...

@அடலேறு
உங்கள் ரசனையும் அழகு அடலேறு. நன்றி!

இளைய கவி said...

ரொம்ப நல்லா இருக்கு தல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

Ashok D said...

@இளையகவி
நன்றி கவி... ப்ரொபைல்ல யாரு உங்க கேர்ள் ப்ரெண்டா? :)

@T.V.Radhakrishnan
நன்றிங்க!