Friday, November 20, 2009
தந்தியற்ற வீணை
வட்டங்களிலும் சந்திப்புகளிலும்
தடித்து போயிருக்கும் சாதிய இருள்மை
அதே கொடுமை தாங்காது இனமே
சிதைந்தும் நடுங்கி பிழைத்தல்
சில கட்டங்களுக்கு மேல் உயரமுடியாமல்
போகும் அவலம்
சோற்றுக்கும் வாடகைக்குமே
ஓடி வாழும்! நரக வாழ்க்கை
வாழ்வின் தொடரோட்டத்திற்கு அஞ்சி
கனவில் கூட வர மறுத்த இறுகிப்போன காமம்
தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை
தனித்தே இருக்கும் வேதனை, கோபம், கண்ணீர்
என்றேனும் அறியபடுத்துமா உங்களுக்கு
இந்த சாபமிட்ட வாழ்க்கையினை?
இத்தனை கசடுகள் நடுவினிலும்
வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்
அர்த்தப்பட முயற்சிக்கும் சொற்கள்
வந்துவிழும் கணங்கள் சுகமே.
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
ஐயோ....ரொம்ப பிடிச்சு இருக்கு மகனே..!
//தொடரொட்டத்திற்கு//
தொடரோட்டத்திற்கு
//தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை//
மனசை,என்னவோ பண்ணும் ஆக்கம்,அசோக்!
நான் தான் முதலாவது என்று நினைத்தேன் பா.ரா.முந்திவிட்டார்
இடது கண் துடிப்பதை கண்டு வலக்கண் துடிப்பது இயல்பே சித்தப்ஸ்..
//தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை//
ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க சார்..
கோர்வையா சோகம் சொன்ன விதம் பிடிச்சுருக்கு அசோக் சார்
அப்பா எத்தனை துயர்
//வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்//
ரொம்ப நல்லா இருக்கு அசோக்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வலியை வார்த்தைபடுத்தி விட்டீர்கள்.. அருமை :)
//வாழ்வின் தொடரோட்டத்திற்கு அஞ்சி
கனவில் கூட வரமறுத்த இற்றுப்போன காமம்//
//தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை//
மனதை பிசையும் வரிகள்...கவிதை ரசித்தேன்.
நல்ல கவிதை.......
கவிதை நல்லாயிருக்கு..படம் பொருந்தவில்லை..அப்ஸ்ட்ராக்டாக படம் போடவும்..(திருப்தியா கவிஞரே)
சரி ..எதுக்கு கமெண்ட் மாடரேஷன்?
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....வலி!! நிதர்சனம்.
இப்படித்தான் வாழ்க்கை ஒடுகிறது. என்று விடியும் என்று தெரியவில்லை
@ தியா
நன்றி தியா, கவிதையை பற்றி?
@ வசந்த்
உணர்ச்சி தன்வயப்படுதலே / தன்வசப்படுத்தலே காதலும் கவிதையும் :)
@ மண்குதிரை
நாடியை சரியாக பிடித்தாய் என் கவிதை நண்பனே
@ பிரசன்ன குமார்
நன்றி பிரசன்ன குமார் புரிதலக்கு
@ க.பாலாசி
:)
@ புலவன் புலிகேசி
உங்கள் ப்ளாக் பார்த்தேன்.. நீங்களும் வாலே :)
@ தண்டோரா
நன்றி ஜி, படம் ஒரு குறியீடு.. அழகான நகரம் அதனுள் எத்தனை குரூரம் சோகம், கவிதையும் மிக காட்டா இருப்பதனால்.. போட்டோவாவது லைட்டா இருக்கட்டுமேன்னு யூத்து கொடுத்தidea :) திருப்தி
comment moderation இருந்தாதான் முந்தைய பதிவுக்கு யாராவது பின்னோட்டமிட்டால் அவர்களுக்கு நன்றி சொல்ல முடியும்.
@ Shakthiprabha
I think u didnt place any comments for last two kavithai's. நன்றி shakthiprabha
@ tamiluthayam
வாழ்ந்து பார்த்துடவேண்டியதுதான், Best of luck :)
கவிதை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,கவிதையிலிருக்கும் வாதை என்னை அலைக்கழிக்கிறது அசோக்.
அப்பப்பா...
ரொம்ப சூடு டொக்டர்..
வடிவத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
விஷயம் ரொம்ப கனம்...
(இனிஷியலில் நடுவிலுள்ள புள்ளி கண்ணுக்கு தென்படுவதேயில்லையாதலால்...டொக்டர்.)
@ யாத்ரா
கவிஞனே.. உனது வார்த்தைகள் எனக்கு தெம்பை கொடுக்கிறது யாத்ரா.
@ கும்க்கி
என்னங்க முதல் பின்னூட்டத்திலேயே இப்டி கும்க்கி எடுக்கிறீங்க. நிறைவு நன்றி :)
அஷோக் அப்பா,நான் தான் கடைசி.(அதுவும் நல்லது)
என்னைச் சொல்லிச் சொல்லி எப்போ நீங்க அழுவாச்சிப்பிள்ளையா மாறினீங்க ?அடுத்த கவிதை ஒழுங்கா சந்தோஷமா எழுதிடுங்க.
ஆமா.கவிதை நல்லாருக்கு.
தந்தியற்ற
வீணையையும்
வாசிக்க முடிந்தது
சோக கீதமாய்..
அருமை நண்பரே
(பையனோட வாங்க மீனுக்கு உணவிட, உணர்விட)
பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
@ ஹேமா
ஹேமா ஆண்ட்டி உங்களவிட 17 வயசு சின்னவன் நானு. உங்க வயசு 41ன்னு சித்தப்ஸு எனக்கு சொல்லிடிச்சு :P
சோகமா.. கடைசிவரிலஹீரோ எப்டி வெளிய வர்றான்னு பாருங்க. இது நிதர்ஸனக்கவிதை ஹேமா ;)
மனம் கனத்த கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்
என்ன சார் ஒரே அழுவாச்சி கவிதையா எழுத ஆரம்பிச்சிட்டீங்க !!
என்ன ஆச்சு ?
குப்புக் குட்டி
பி,கு:
என்ன சார் நீங்களும் ஜி.கா மாதிரி என் பெயரை பிடிசுகிடீங்க குப்பன் யாஹூ -க்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அந்த நல்லவரை விட்டுவிடுங்கள்
நல்ல கவிதை பாராட்டுக்கள்...
@ சந்தானசங்கர்
@ பேநா மூடி
நன்றி நண்பர்களே
@ குப்புக்குட்டி
அனுஜன்யா கேட்டேவிட்டார் ‘நீங்கள் இல்லையே குப்புக்குட்டின்னு’, ஜ்யோவும் கேட்டார். இதுதேவையா வாழ்வுகொடுக்கும் ஆயிரம் துயரங்களுக்கு நடுவே நம் சந்தோஷத்திற்குகாகவே ஏதோ எழுதிச்செல்கிறேன். நீங்கள் உங்கள் உண்மையான பெயரோடு வாருங்கள். அப்புறம் எந்த பிளாக்லயும் எனைப்பற்றி பின்னோட்மிடுவதையும் தவிருங்கள். Plz. நன்றி
@ கவிதை(கள்) விஜய்
இதயம் கணிந்த நன்றி
//சோற்றுக்கும் வாடகைக்குமே
ஓடி வாழும்! நரக வாழ்க்கை//
நல்ல வரிகள்...............
@ நன்றி ஊடகன்
@ குப்புக்குட்டி
நீங்கள் சொல்வது உண்மைதான் ;)
fine sir..
@ குப்புகுட்டி
உங்கள் கமெண்டை pulish செய்யாதற்கு மன்னிக்கவும்.. நானே கவனித்து கொள்கிறேன் நன்றி.. பெயர் தெரிந்து ஒருவருடன் பேசுவதோ, சண்டையிடுவதோ சிறந்தது.. வழ வழா கொழக்கொழன்னு எவன்கிட்டயும் இருந்ததில்ல. so profilloda வாங்க. நான் சுயமரியாதை உள்ள வீரனே. இரண்டு முறை சண்டையில் boxer fracter ஆனாவன்.. நான் :)
@ karthikeyan G
நன்றி கார்த்தி
கவிதை பிடித்திருந்தாலும் கழிவிரக்கம் அதிகமா இருக்குங்க
@ நன்றி விநாயக்
இன்னும் உத்துபாத்தா சாதிய இருள்மை, நரக வாழ்வின் அவலம், சமூக அவலம்ன்னு நிறைய படிமங்கள் கிடைக்கும். இன்னும் பாத்தா(உத்துதான்ப்பா) இவ்வளவு அவலத்தையும் தாண்டி ஒருத்தன் வெளியே வரனும்னா என்ன செய்யனும் ’அவன் மனசுக்கு பிடிச்சதை இறுக்கமா புடிச்சுக்கனும்’ என்ற அறிய(உலகமகா) கருத்தை கவிஞர் சொல்லியிருக்கிறார் விநாயக் :)
நல்லா இருக்குங்க
நிதர்சனம்
@ஜோதி
நன்றி ஜோ :)
உண்மையிலேயே உங்களுக்கு கவித்துவம் இருக்கிறது.
Previously, I thought you are a pesudo!
@கள்ளபிரான்
நன்றி திரு.கள்ளபிரான்
அருமை
@T.V.Radhakrishnan
நன்றி!
//இத்தனை கசடுகள் நடுவினிலும்
வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்
அர்த்தப்பட முயற்சிக்கும் சொற்கள்
வந்துவிழும் கணங்கள் சுகமே.//
பலருக்கும் எழுத்து துயர் தீர்க்கும் அருமருந்து நண்பரே
@SUREஷ்(பழனியிலிருந்து)
நன்றி நண்பரே :)
தமிழ்மணவிருதில் முதல்கட்டத்தேர்வுக்கு ஒட்டளித்த அத்துனை வாசகர்களுக்கும் & சகபதிவர்களுக்கும் D.R.அஷோக்கின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் உத்துபாத்தா சாதிய இருள்மை, நரக வாழ்வின் அவலம், சமூக அவலம்ன்னு நிறைய படிமங்கள் கிடைக்கும். இன்னும் பாத்தா(உத்துதான்ப்பா) இவ்வளவு அவலத்தையும் தாண்டி ஒருத்தன் வெளியே வரனும்னா என்ன செய்யனும் ’அவன் மனசுக்கு பிடிச்சதை இறுக்கமா புடிச்சுக்கனும்’ என்ற அறிய(உலகமகா) கருத்தை கவிஞர் சொல்லியிருக்கிறார் விநாயக் :)//
haa haa haa...::))
@பலா பட்டறை
:)))))))))) (எப்பூடி நம்ம நய்யாண்டி)
மகனே,
ஓட்டு போட கத்துக்கிட்டேன்.ஓட்டும் போட்டேன்.
சிங்கம்ல நாங்க..
(பப்ளிஷ் பண்ணும்போது சிங்கத்துக்கு முன்னால அ-சேர்த்து விடாதீர்கள்.ush.. எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கு.)
Post a Comment