Thursday, January 7, 2010
உணவின் சுருதிபேதங்கள்
1. என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடங்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்
2. பரிமாறும் பூபோன்ற
சுடான இட்டிலியில்
கைவைக்கும்போதெல்லாம்
சட்டென அவள் கன்னம்
உணர்கிறேன்
கன்னத்தில் ஊறுகையில்
இட்லியின் ஸ்பரிசம் வந்தமைகிறது
அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கன்னமும்
ஒன்றேயென
3. ஹட்சன் அண்ணபூரனா தயிர்கள்!
ஆவின் மற்றும் பிற பால்
வழி வந்த தயிர்சாதம்,
சரவணபவன்! கணேஷ்பவன்!
தயிர்சாதம், என
ருசி பேதங்கள்
எப்போதும் இட்டுச் செல்லும்
ஆச்சரியங்களை.... !
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
//1. என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடன்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்//
தேன்தேன்தேன்தேன்தேன்தேன்தேன்தேன்
தேன்தேன்தேன்தேன்:::))))
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்"ணா"
நல்லாருக்குங்"ணா"
//கண்ணம்//
கன்னம்..?
:-)))
கவிதைங்களா??
டாக்டர்...
:))
//என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடன்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்//
கொஞ்சம் ரெஷிப்பி வாங்கி கொடுங்க தல!, நான் மீன் கொழம்பு கேட்டா ”its mean kolampu” தான் கிடைக்குது
அது என்ன இட்லிங்க பாஸ்.?? மஞ்சள் கலர்ல இருக்கு??
(என்னது? கவிதைய பத்தி சொல்ல சொன்னா.. இட்லி பத்தி எழுதுது பாரு மூதேவின்னு திட்டுறது காதுல விழுது!!)
இட்லி சூப்பர்... கவிதையும்தான்!!
நல்லாருக்கு
//கன்னத்தில் ஊறுகையில்
இட்லியின் ஸ்பரிசம் வந்தமைகிறது
அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கன்னமும்
ஒன்றேயென //
இட்டிலியாலேயே அடி வாங்க போறீங்கன்னு நினைக்கிறேன்
டாக்டர் முதலாவது நல்லாருக்கு
அருமையான கவிதைகள் நண்பரே. //அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கன்னமும்
ஒன்றேயென// ரசனை :-)
சரி..சரி..மருமகள் ஊருக்கு போய்ட்டாங்கலாக்கும்?
:-)
என்னய்யா இதெல்லாம் கவிதையா.? சே.. ஒரு எடிட்டர் இல்லாம துளிர் விட்டு போச்சு.. அப்படியும் முதல் நலலருக்கு. தயிர், வெண்ணைய் எல்லாம் படு கொழ,கொழ
ஓங்கி அறைஞ்சா கன்னம் கூட இட்லி மாதிரிதான் இருக்கும்!!
@பலாபட்டறை
:)))
@Vidhoosh
சரி பண்ணிட்டேனுங்”ணா”
thanksங்"ணா”
கவிதை(!) வெளியிட்டபின்னர் ஒரு 6 வாட்டி edit செஞ்சியிருக்கண்னா... (திரும்பவும் படிக்கவும்)
உங்கள் ’பெண்ணே’ பதிவு படிக்கவே டெரரா.. இருந்துச்சு.. பாதி படிக்கசொல்லோ ஓடி வந்துட்டேன்..
@T.V.Radhakrishnan
தோழிக்கு பெரிய கன்னம்.. அதான் மூணு சுழி... கன்னம் என்றாலே தடுமாற்றம் சகஞ்தானே சார் :)))
@ஜெட்லி
//கவிதைங்களா??
டாக்டர்...//
கவிதையில்ல
டாக்டர் இல்ல.. ஜெட்லி உனக்கு நிறய மார்க்
@வால்பையன்
க்வாட்டரோடு நிறுத்திக்கிட்டு தங்கச்சி கிட்ட பக்குவமா பேசினீங்கன்னா.. தேன் குழம்பு கிடைக்கும்... அதுக்கு முன்னாடி மார்க்கெட் போய்(தங்கச்சிய கூட்டுதான்ப்பா)மீன் வாங்கி கொடுக்கவும் :)
@கலையரசன்
மஞ்சா கலர் பெயிண்ட்(மாஞ்சா) அடிச்சா மஞ்ச இட்லி .. (அது வெறும் குழம்பு மஞ்சள் தூள் மகிமைதான்)
நன்றி கலை
இட்லி கவிதை ரொம்ப நல்லாயிருக்குண்ணா...!
போட்டோ சூப்பர்
சாப்பாட்டு கவிஞராகி விட்டீரே..நல்லா இருக்கு அஷோக்
//தண்டோரா ...... said...
ஓங்கி அறைஞ்சா கன்னம் கூட இட்லி மாதிரிதான் இருக்கும்!!//
hahaha ...:-)
superb aa oninga thandora
பலா பட்டறை said...
//1. என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடன்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்//
தேன்தேன்தேன்தேன்தேன்தேன்தேன்தேன்
தேன்தேன்தேன்தேன்:::))))//
என்ன ஷங்கர் என் பெயரை ஒரு பன்னிரெண்டு தடவை சொல்லி இருக்கீங்க
அத்தனை தடவையா மீன் குழம்பு சாப்பிட்டீங்க
@சங்கர்
செல்லமாகதான் வாங்கியிருக்கேன்.. தோழிகளிடம் :)
@மோகன்
உங்கள் முதல் வரவுக்கும் க. நன்றி :)
@அடலேறு
:-))
@கேபிள் சங்கர்
நீங்க இந்த பக்கம் வந்தாதானே எண்டர் கவிஞரே! அங்கிளே!
@தண்டோரா
நயமானவரே.. அவங்க அடிச்சா அது சும்மா.. இதே நாம்ம அடிச்சா அது வரலாறு.. நான் வரலாறு கடந்தவன் (அதுவும் கேபிளுக்கும் சாருவுக்கும் தெரியும்)
@பிரியமுடன் வசந்த்
அன்பு தம்பி
நன்றியெல்லாம் சொல்லமாட்டேன் ஜாலியா இரு.. happylife :)
@புலவர் புலிகேசி
நன்றிங்க புலவரே
@thenammailakshmanan
:))
//அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கண்ணமும்
ஒன்றேயென //
ஏன்? :-)
நல்லாருக்கு ;-)
@சித்தப்ஸ்
:)
@மண்குதிரை
:)
@உழவன்
இப்போ சொல்லிட்டேன் :)
மஞ்சள் கலரு சிங்கிச்சா
வெள்ளைக் கலரு சிங்கிச்சா
பச்சைக் கலரு சிங்கிச்சா
இட்லி பசிக்குது சிங்கிச்சா !
Drஅஷோக்,நேத்து வேலைக்குப் போற அவசரத்தில இட்லி கவிதையைப் பாக்காமப் போய்ட்டேன்.இட்லியைச் சாட்டி அவங்களையும் அவங்களைச் சாட்டி இட்லியையும் திட்டியிருக்கீங்களா போற்றியிருக்கீங்களா தெரில.அவங்க பாத்தாங்களா கவிதையை !
@ஹேமா
அத்தை நீங்க ரொம்ப sharppunnu எங்களுக்கு தெரியும்... ஒரு படைப்பாளி தன் ஒவ்வொரு படைப்பிக்கும் பின்னாடியிருக்கனும்ன்னு அவசியம் இல்ல.வேறொரு நிலையில் இருந்தும் எழுதலாம்
நன்றாக இருக்கிறது, சுருதிபேதங்கள் அருமை.
@V.ராதாகிருஷ்ணன்
நன்றிங்க!
இட்லி +கவிதை=கவிட்லி சூப்பர் சுவை
@goma நன்றிங்க :)
Post a Comment