Friday, January 8, 2010

அகமகிழ்தல்



மலர்ச்சியா இருந்தது
பேருந்தில் நண்பனை பார்த்ததும்
எடுத்தவுடன் சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்தான்
பேச்சுகள் இடம் மாறிக்கொண்டேயிருந்தது
ஜன்னல் வழி செல்லும் கிராமங்களாய்
சாருவும் ஜெயமோகனும் வந்துபோனார்கள்
ஓஷோ, ஜெகே, தர்க்கம் செய்தனர்
கவிதையில் தாகூர் நகுலன் என மாறி
டக்கென்று பிரமீளிடம் மையம் கொண்டோம்
நிறுத்தம் வரவே பிரியாவிடை பெற்று
நடக்க துவங்குகையில் ஏதோ உறைத்தது
மல்லாட்ட பையும் கரைச்ச நுங்குவும்
பஸ்ஸோடு போயிருந்தது

ஒன்றுக்கும் லாயக்கில்லை எனச்
சொல்லபோகும் வார்த்தைகளை
மனசுக்குள் முன்மொழிந்துக்கொண்டே
நடந்தது கால்கள் வீடுநோக்கி

பிறிதொரு ஆறு மணிநேர
பேருந்து பயணத்தில்
நண்பனை கண்டதும்
மலர்ந்து எழுந்தது நெஞ்சம்
இம்முறை அவன்
ரூஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்

22 comments:

Paleo God said...

செவி வழிதான் நமக்கு உணவு.. வவுத்துக்கு மறந்துதான் போகும்..

ருஷ்ய புரட்ச்சியா!!... இப்பதாங்க நெம்ப பசிக்கிது...

அருமை..::))

ப்ரியமுடன் வசந்த் said...

//பிரியாவிடை பெற்று
நடக்க துவங்குகையில் ஏதோ உறைத்தது
மல்லாட்ட பையும் கரைச்ச நுங்குவும்
பஸ்ஸோடு போயிருந்தது
//

ஹா ஹா

அண்ணா நகைக்கவிதையா இது?

ப்ரியமுடன் வசந்த் said...

இம்முறை அவன்
ரூஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்
//

அடுத்து எதை மிஸ் பண்ணுனீங்கன்னு சொல்லவேயில்ல..

Ashok D said...

@பலாபட்டறை
//செவி வழிதான் நமக்கு உணவு.//:)

@பிரியமுடன் வசந்த்
எதையும் கொண்டுவரவில்லை :)

butterfly Surya said...

hahaha.. ரசித்தேன்.

குரு ஓஷோவை கண்டதும் ஒரு ஆனந்தம்.

வாழ்க Dr. அசோக்.

பா.ராஜாராம் said...

வாவ்! ரொம்ப பிடிச்சிருக்கு மகனே..

முதல் பாரா முடிவிலேயே ஒரு அருமையான கவிதை இருக்கு.தொடரும் போட்டு ரெண்டாவது,மூணாவது பாராவில் மற்றொரு கவிதை (இதன் சார்ந்தே)பயணமாகுது."ருஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்"என்பதிற்கு பிறகு மூன்றாவது கவிதை தொடங்குது..

கிரேட்!

(ரசிகர் மன்றத்தில் ஒரு துண்டு போட்டு வைங்கப்பு!)

சங்கர் said...

கவிதை நல்லாருக்கு,

வரிசைல ஒரு பேரு மட்டும் தான் கொஞ்சம் இடிக்குது :))

புலவன் புலிகேசி said...

//ஒன்றுக்கும் லாயக்கில்லை எனச்
சொல்லபோகும் வார்த்தைகளை
மனசுக்குள் முன்மொழிந்துக்கொண்டே
நடந்தது கால்கள் வீடுநோக்கி//

இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை Ashok

hayyram said...

gud. continue.

regards
ram

www.hayyram.blogspot.com

மண்குதிரை said...

கவிதை நன்று நண்பா

Thenammai Lakshmanan said...

//பிரியமுடன்...வசந்த் said...
இம்முறை அவன்
ரூஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்
//

அடுத்து எதை மிஸ் பண்ணுனீங்கன்னு சொல்லவேயில்ல..//

ஹாஹாஹா

எதை வாங்கிட்டு வருவாரோ அதைதானே அஷோக்

கலையரசன் said...

மகிழ்ந்தது.. மகிழ்ந்தது..

யாரு இந்த தாத்தா.. ஆனந்த விகடனில் "உனக்காகவே ஒரு ரகசியம்" தொடர் எழுதுறவருதானே??
:-)))))))))))))))))))

Ashok D said...

@Butterfly Surya
தங்கள் முதல் வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே :)

@சித்தப்பு
பிரிஞ்சி மேஞ்சிட்டீங்களா... கவனித்து வாழ்த்தியதற்க்கு special thanks சித்தப்ஸ் :)

@சங்கர்
இடிக்குதுன்னா தள்ளி ஒக்காந்துக்கவேண்டியதுதானே சங்கர் :)

@புலிகேசி
அரசியல்ல இதெல்லாம் சகஜமே

Ashok D said...

@T.V.Radhakrishnan
நன்றிங்க :)

@hayyram
thanx Ram
first visit :)

@மண்குதிரை
ரொம்ப நன்றி நண்பா

@Thennammai Lakshmanan
எப்போவும் பைக்கலதான் ஊர்களுக்கு போயிருக்கேன் சின்னகுழந்தையா இருக்கும் போது தவிர்த்து :)

@கலையரசன்
கலை அது எங்க நிஜ தாத்தா :)))

ஹேமா said...

வாழ்வே இப்படித்தானே யதார்த்தம் அஷோக்.ஒன்றில் தொட்டு ஒன்றில் கலந்து ஒன்றைக் கடந்து கரையும்.

நுங்கு குடிச்சு ரொம்பக் காலமாச்சு.
ஞாபகப் படுத்திடீங்க.பழைய நினைவுகளைக் கூட.

தேவன் மாயம் said...

//பிரியாவிடை பெற்று
நடக்க துவங்குகையில் ஏதோ உறைத்தது
மல்லாட்ட பையும் கரைச்ச நுங்குவும்
பஸ்ஸோடு போயிருந்தது
//

கலக்குங்க அசோக்!!

Ashok D said...

@விதூஷ்
:)

Ashok D said...

@ஹேமா
உண்மைதான் ஹேமா... ஏதுவும் கோபம் இல்லையே என் மீது... நான் கொஞ்சமாதான் கல்லாய்பேன்.. நீங்க சீரியஸா எடுத்தாக்காதிங்க...

@தேவன்மாயம்
நன்றி டாக்டர்... நிறைய பேர் என்னை டாக்டர்ன்னு நினைச்சிக்கிட்டுயிருக்காங்க...
இதெல்லாம் இந்த யூத்து பண்ற சதிதான்ங்க...

மகாஜனங்களே நான் டாக்டர் இல்ல... அது D(புள்ளி)R(புள்ளி)அஷோக் :)))

ஹேமா said...

அஷோக் எங்க கலாய்க்கவேயில்ல.
அப்புறம் எப்பிடிக் கோவிக்கிறது.நீங்க கிலுகிலுப்பை எப்ப வாங்கித் தருவீங்கன்னு பாத்திட்டு இருக்கேன் நான்.நீங்க என்னடான்னா...!

Sai Ram said...

அடேங்கப்பா இவ்வளவு நல்லா எழுதுவீங்களா? எனக்கு இன்னிக்கு தான் தெரியும்!

Ashok D said...

@ஹேமா
வந்துஇறங்கிட்டேன்... வீட்டுக்கு தான் டாக்ஸி பிடிச்சுட்டுயிருக்கிறேன்..

@சாய்ராம்
நம்மக்கு பின்னூட்டம் போடறவங்கலயம் கிளிக் பண்ணி படிச்சு பாக்கணும் :) நன்றி சாய்