Saturday, January 16, 2010
அலை சித்திரங்கள்
நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான்
போகிறது வழக்கம்போல்,
புரியாமல் மௌனமாய்
பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்
ஒவ்வொரு முறையும்
வாழ்க்கை சித்தரத்தில்
எத்தனை மாயக்கோடுகள்
தொடக்ககோடும் முழுமைபெற்ற
கடைசிகோடும் மறந்துப்போய்
மௌனமாய் சிரிக்கும் ஓவியம்
Scene 153 short no:82 Take 2
நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது
என்னுள் இருக்கும் அகங்காரத்தை
மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
வாழ்வின் சில கோடுகள் எம்மோடு நிரந்தரமாகவே பதிந்துகொள்ளும் அஷோக்.கவிதையில் கனம்.
@ஹேமா
:)
மிகவும் நன்றாக இருக்கிறது..தொடருங்கள் நண்பா..
தல நினச்சேன்.. கரையில நின்னதுக்கே இவ்ளோ கனமா..::))
ஸூப்பர்.
இயற்கையில் நமது கர்வம் தொலையட்டும்.
ரொம்ப பிடிச்சிருக்கு மகனே..
இங்கும் அங்கும் அசைய விடாமல் வெகுநேரம் வரையில் வேறெங்கும் இல்லாமல் அறிதலில் காதல்-லில் இருந்தேன்."அறிந்ததனின்றும் விடுதலை!"
@கமலேஷ்
நன்றி கவிஞனே!
@பலாபட்டறை
ஷங்கர் :)
@வெ.இராதாகிருஷ்ணன்
உண்மைதான் கிருஷ்ணன்
@பா.ராஜாராம்
சித்தப்ஸு.. இதவிட சந்தோஷம் வேறென்னயிருக்குமுடியும் எனக்கு...
அண்ணா இந்த போஸ்ட் லேட்டா வந்துருக்கு போன போஸ்ட்டுக்கு முந்தி வந்திருக்கு ஒரே குழப்பமா இருக்கு...
இந்த ஹேமா எதையாவது ஒண்ணு சொல்லி குழப்பிடுவாங்க கவனம் ....
@வசந்த்
ட்ராப்டில் வைத்து வெளியிட்டதால் வந்த் குழப்பம் அது. உண்மையில் நேற்றுதான் ப்ளிஷ் செய்தேன்.
ஹேமா அத்தை சரியாதான் சொல்லுவாங்க, என்ன அவங்க languageu தான் நமக்கு புரியாது. ஆனா அவங்க நம்மள புரிஞ்சுப்பாங்க :)
இருங்க இருங்க ...ரெண்டு பேரும்.எங்காச்சும் மாட்டாமலா போவீங்க.
சித்தப்ஸ் உங்க மகனையும் சின்னப்பையன் வசந்துவையும் கவனிச்சு வையுங்க கொஞ்சம்.
உங்களுக்கெங்க நேரம்....!
உண்மையிலே கனமான கவிதை. ஒரு கதையின் விசித்திரமான காட்சி கட்டுதல் முறை போல கவிதை வரிகளை கட்டமைத்து வேறு ஓர் உணர்வை மனதிற்குள் கொண்டு வந்தாற் போல இருக்கிறது. வரிகளை இன்னும் அதிகமாக்கினால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
@ஹேமாக்கு ஒரு மசால் தோசை பார்சல் :)
@சாய்ராம்
உண்மையில் உங்கள் பின்னூட்டம்தான் அழகாய் உள்ளது. தொடர்ந்து வந்து உங்கள் கருத்தை பதிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சாய்ராம்!
Post a Comment