Sunday, September 20, 2009

காதல்

கவிதை தொட்ட கைகளில்
காமனை தொடமாட்டேன்
என பகர்ந்தேன்

காதலி எனை இழுத்து
அழுத்தமாய் உதட்டில்
முத்தமிட்டால்

இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்

25 comments:

ஹேமா said...

அஷோக்,என் தளம் இப்போதான் அறிந்ததாகச் சொன்னீர்கள்.
இல்லையே.முன்னம் ஓரிரு முறைகள் உங்களைக் கண்டதாய் ஞாபகம்.பாலாஜியின் தளத்திலும் நீங்கள் என்னைக் கண்டித்ததாய் ஒரு ஞாபகம்.உங்கள் கவிதைகளைப் படித்தும் இருக்கிறேன்.
பின்னூட்டத்தில் சந்தித்தும் இருக்கிறேன்.

இன்று என்ன சண்டே ஸ்பெஷலா !காதல்.ம்ம்ம்ம்...நானும் ஒரு காதல் கவிதை பதிந்தேன்.சண்டே சந்தோஷம்தான்.

passerby said...

காதல் என்பதே ஒரு பொய்யான ஒன்று. அதில் உண்மையென்பதே ஒரு வீண் தேடல்.

முதல் பத்தி (stanza) சொல்வது ஒரு பச்சைப்பொய்.

என்று இரண்டாவது பத்திப் பகர்கிறது.

எனவே, இரணடாவது ஒரு பேருண்மையாகும்.

பெண், ஆணை, உண்மையைப் புரிய வைக்கிறாள்.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வள்ர்ந்த புலவர் பெருமக்களான’ ஆண்களை, ’உல்கம் என்றால் என்ன?’ ’உண்மையென்ன?’ என்பதையெல்லாம் புரியவைக்க, புலவரில்லாப் பெண்களை இறைவன் படைத்திருக்கிறான் என்பதே இக்கவிதையின் சாராம்சம் என்பது என் புரிதல்.

ப்ரியமுடன் வசந்த் said...

தல காதல் மனசுக்குள்ள திரும்பவும் மத்தாப்பூ மாதிரி பொறிகிளப்புது..

சூப்பர்..

விநாயக முருகன் said...

அன்னத்தை தொட்ட கையால்
மதுக்கிண்ணத்தை இனி நான்
தொடமாட்டேன் என்ற பாடல் வரிகள் ஏனோ மனதுக்குள் ஓடுகிறது...


இனி கவிதை எழுத்தில் இல்லை...
நடத்துங்க :)

க.பாலாசி said...

//காதலி எனை இழுத்து
அழுத்தமாய் உதட்டில்
முத்தமிட்டால்
இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்//

ரசிக்கத்தக்க வரிகள் அன்பரே...

ஆனாலும் குறும்புதான். கவிதை எழுதும் இடமா அது...கற்பனையின் உச்சம்...அழகு...

Ashok D said...

ஹேமா உங்களை எனக்கு தெரியாதா. உங்கள் பின்னோட்டங்கள் கவிதையை போலயிருக்கும். ஆனால் உங்கள் தளத்தை நான் நேற்றுதான் தெரிந்துக்கொண்டேன்.

பாலாஜியின் தளத்தில் உங்களை ’கண்டிக்கவில்லை’ just ’எருது’ ’பசு’ என்றேன். பொதுவாக இரண்டுக்குமே அந்த கவிதை பொருந்தும் so அது just fun… ’கண்டிப்பு’ என்பதேல்லாம் பெரிய வார்த்தை. அதற்கு பாலாஜி தளத்திலே ’மன்னிப்பு’ என்றெல்லாம் சொல்லியிருந்தீர்கள். அதொல்லாம் ரொம்ப ஓவர் :)

உங்கள் தளத்தில் உங்கள் காதல் கவிதையும் நேற்று படித்தேன். நல்லாயிருந்தது. செதுக்குங்கள். பின்னூட்டம் இடலாம் என்றால் ஏற்கனவே நிறைய பாராட்டுகள் குவிந்திருந்தது. நமக்கு கூட்டமென்றால் அலர்ஜி அதான் அப்படியே escape. அப்புறம் உள்ளே நுழையும் போதே அற்புதமான காதல் பாட்டு FMல் ஒலித்தது. நன்றி ஹேமா அன்புக்கும் பாராட்டுக்கும்.

Ashok D said...

@ சி.வி.சி

பிரமாதம். இதைவிட நான் என்ன சொல்லிடமுடியும் :)
புதிதாய் தளம் ஆரம்பித்து உள்ளீர். நன்று.

Ashok D said...

@ வசந்த்

good vasanth. Keep it up.

Ashok D said...

@விநாயக்

எனக்கு அண்ணம், கிண்ணம் இரண்டுமே பிடிக்கும் :)

அந்தப்பாடல் வரிகள் எனக்கு ஒவ்வாது ;)

நன்றி விநாயக்

Ashok D said...

@ க.பாலாஜி

உதட்டில் என்ன உதடுகளாலும் எழுதலாம் கவிஞரே ;)
நன்றி பாலாஜி.

பா.ராஜாராம் said...

என்ன அசோக்,செமை மூட் போல?நடத்துங்க..

Jerry Eshananda said...

அட நல்லாயிருக்கே..,

சந்தான சங்கர் said...

அழுத்தமான முத்ததில்தான்
ஆழமான வரிகள் பிறக்கும்
நண்பரே!

வாழ்த்துக்கள்..

Ashok D said...

@ பா.ராஜாராம்

வாங்க சார். அதுதான் கவிஞர்களுக்கு கிரியா ஊக்கியாடிச்சே சார்.

@ ஜெரி ஈசானந்தா

முதல் வருகைக்கு நன்றி ஜெரி. உங்க பேரே வித்யாசமா இருக்கே :)

வால்பையன் said...

//இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்//


கவிதையென்பது
வரிகளாலானெதென்றால்
அவள் உதடுகளும்
கவிதை தானே!

Ashok D said...

@ வால்

க்ரெக்டு அருண்.
கொஞ்சம் வளைந்த வரிகள் அவ்வளவுதான் ;)

Ashok D said...

@ சந்தான சங்கர்

அனுபம் பேசுகிறதா சங்கர்.

நன்றி சங்கர்.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க கவிதை

Ashok D said...

@ நேசமித்ரன்

வருகைக்கு நன்றிங்க மித்ரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்பத்தான் படிச்சேன். எனக்குக் கவிதை பிடிக்கலை.

Ashok D said...

@ஜ்யோவ்ராம்சுந்தர்

தல ஃப்ஸ்ட் நான் எழுதறது கவிதையே இல்ல. மனசல மாட்றத அப்பபோ கிறுக்கிறது உண்டு.

இதுக்கூட கேபிளாருடன் பேசும்போது ஒரு நொடியில் உருவான வார்த்தைகள் அவ்வளவே.(அவரோட சேர்ந்தா கவிதையா வரும்)

உங்களது பின்னோட்டம் எனக்கு ’சீரியஸாக எழுது டபாய்க்காதே’ என்று நீங்கள் சொல்லவதை போலத்தான் இருக்கிறது.

இனி பொறுப்புடன் நடந்துக்கொள்கிறேன். உங்கள் நேர்மைக்கு நன்றி :)(இனி கேபிள் சங்கருடன் சேரமாட்டேன்)

மற்ற கிறுக்கல்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

கலையரசன் said...

உதட்டில் எழுதினால் அழிக்க முடியுமா?

Ashok D said...

@ கலை

அழிக்கமுடியாது கலையரசன் ஏனெனில் நினைவுகளில் தங்கிவிடுவதினால் (ஏப்பூடி... சமாளிச்சம்ல)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்லாருக்கு.

Ashok D said...

@ விக்னேஷ்வரி

நன்றி VIG