Wednesday, January 20, 2010

வெறுமையும் நானும் - பரவசம்

வெறுமை தரும் சூழல்
தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை
கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்
ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல
துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்
கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு
அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்
எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்
எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்
பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்
திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்
திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு
டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்
வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி
வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது
தண்டோராவின் இன்றைய பதிவு
வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்
வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக
தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட்டும் வெறுமையாய்
வெறுமைதரும் கனமற்று

28 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணே போளி சென்னையில எங்கண்ணே நல்லாருக்கும்? ஊருக்கு வந்தா சாப்பிடணும் ஆசைய தூண்டிவிட்டுட்டீங்களேண்ணே.....

வெளியில பார்க்க வெறுமையா தெரியுற போளியும் மனுசனோட வாழ்க்கையும் ஒண்ணுதான்
ஆனா போளிக்குள்ள எப்படி சுவையான பருப்பிருக்கோ அதே போல மனுசனுக்குள்ளயும் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கிற சுவையான நிகழ்வுகளும் கலந்திருக்கே....

கமலேஷ் said...

எல்லா விசயத்தையும் கவிதை ஆக்கி விடுவது என்று ஒரு முடிவோட கிளம்பி இருக்கிற மாதிரி தெரியுது...நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்....

ஜெட்லி... said...

நாலு பலூன் சுட்டிங்களா??
நீங்க எப்போதும் லேட்ஆ தானே போவிங்க??

Thenammai Lakshmanan said...

/தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட்டும் வெறுமையாய்//

நல்ல பரவசத்தோட வெறுமையாய் இருக்குறமாதிரி இருக்கு அஷோக்
:))))))

சங்கர் said...

எல்லாரும் வீட்டுக்கு கிளம்புற நேரத்தில் வந்தால் இப்படி கவிதை தான் எழுத வேண்டி வரும் :))

Vidhoosh said...

சுவாமி ஒம்காரை சந்தித்தசே இப்படி பலன் கொடுத்துடுச்சா? :))

Dr.Rudhran said...

வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
வால் பையனின் ‘பொது புத்தி’

go on

Ashok D said...

@Dr.Rudhran
:) நன்றி சார்

@ பிரியமுடன் வசந்த்
வாங்க தம்பி போளிதானே சாப்பிடவோம் :)

@கமலேஷ்
நன்றி :)

@ஜெட்லி
நானும் சீக்கரமாதான் போனேன்.. ஆனால் என் பையனோட போனதால அவங்களோட கலந்துக்க முடியல.. அவங்களோட சத்சங்கமும் எங்களால Distrub ஆககூடாதுன்னுதான் :)

ஹேமா said...

அஷோக்...எப்பிடி வெறுமை கனமற்றுன்னு சொல்றீங்க.இந்தக் கவிதையே உங்கள் மனதின் கனம்தானே !

போளியைச் சொல்லி என் பெரியப்பா ஞாபகம் வரப்பண்ணீட்டீங்க.

Ashok D said...

@thenammai
என் மனதை அப்படியே ப்ரதிப்பலித்துள்ளீர், எப்படி? :)

@சங்கர்
ஜெட்லிக்கான பதிலே உங்களுக்கும் :)

@விதூஷ்
அவரை parallelலாக கடந்துவிட்டேன், பலன் கிடைத்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது :))

@ஹேமா
கணத்தோடு முடித்தால் படிப்பவர்களுக்கு கணமேறிவிடும், ஆதலால் என்னோடு எடுத்துச்சென்றுவிட்டேன் :)

சந்தான சங்கர் said...

அருமை கலந்த வெறுமை
கணங்களில் கனத்துவிட்டு
செல்கிறது..

Shakthiprabha (Prabha Sridhar) said...

சிலரது வாழ்வில் வெறுமை என்பது கரும்பலகை போல அஸ்திவாரமாய் அமைந்து விட்டது போலும். அதன் மேல் என்னதான் எழுதினாலும், எழுதுவது வெறுமையின் மேலே அதைப் போக்கிக் கொள்ளும் பிரயத்தனம்.

இது உரைநடை கவிதை போல.

வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

:-)))

Rasanai

Ashok D said...

@சந்தான சங்கர்
கனத்ததா. நன்றி சங்கர்:)

Ashok D said...

@Shakthiprabha
சக்தி... வெறுமைகூட ஞானத்தின் முதல் நிலையோ/படியோ? :)

@முரளிகண்ணன்
வாங்கண்ணா.. சந்தோஷம் நீங்க வந்ததுக்கு :))

பா.ராஜாராம் said...

என்ன மகனே?..

இப்பல்லாம் இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்பினா ஒரு கவிதையை தட்டி விடுகிறீர்கள்?

running comentry கவிதை நல்லா இருக்கு அசோக்!

Ashok D said...

சித்தப்பு இது ‘அலை சித்திர’த்தற்கு முன்னால எழுதனது நீங்க தான் லேட்டு, இது முந்தா நாள், அது நேற்று.. ட்ராப்ட்டுல உள்ளத மாற்றி அமைச்சி எழுததனால வந்த குழப்பம் :)

விநாயக முருகன் said...

சூப்பர் தல

Paleo God said...

இத எப்ப எழுதினீங்க..??!!

அடடா ஏன் எனக்கு அப்டேட் ஆகல..:(

எங்கள சுடறதுக்கு பலூன சுட்டுட்டீங்க..:) பிண்டத்தசுட்டு அண்டத்ல கலந்து என்னமோ பரவசம்..

எதுனா மடம் ஆரம்பிச்சா கேபிள்ஜிக்கு பக்கத்துல எனக்கும் ஒரு ஏசி ரூம் போட்டுருங்க..:))

Ashok D said...

@என்.விநாயகமுருகன்
நன்றி விநாயக் :)

@ஷங்கர்
நாம் சந்தித்த அரைமணியில் எழுதியது :)

கேபிளு மடத்துக்கா வருவார்.. படத்துக்கு தான் வருவார்

thiyaa said...

வலிக்கிறது

Ashok D said...

@தியா :)

Unknown said...

நல்லா இருக்கு..., :-)

Ashok D said...

@பேநாமூடி நன்றிங்க

அகநாழிகை said...

அருமையான கவிதை அஷோக். இந்தக்கவிதை காட்சிப்படுத்துகிற சித்திரம், அதன் போக்கு நன்றாக வந்திருக்கிறது. உண்மையாக சொல்கிறேன், சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த நவீன கவிதை இதுவென்பேன். மிகவும் அருமை. வாழ்த்துகள்.

Ashok D said...

@வாசு
ஆச்சரியமாயிருக்கு ஒரு 3-4 நிமிஷத்தல வந்த வார்த்தைகள். ஆனால் அந்த சமயத்துல இருந்த வெறுமைய பதிவு செஞ்சேன். edit கூட பண்ணல. நன்றி! அப்படியே ’ஊற்றின் கண்’ படித்துவிட்டு சொல்லவும்.

http://ashokpakkangal.blogspot.com/2009/12/blog-post_19.html

na.jothi said...

கடலின் அலைகளும் குழந்தைகளின்
துள்ளும் விளையாட்டும் எல்லாவற்றையும் கரைத்துவிடும்

நல்லா இருக்குங்க

Ashok D said...

@ஜோதி
:)