புத்தகவெளியீட்டில் அவரை பார்ப்பேன் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை. 90களில் அவரை ஒரு முறையாவது பார்ப்போமா என்று மனம் நாயாக அலைந்திருக்கிறது. நேரில் பார்த்தபோது(அதாவது ஒரு நாலைந்து rowக்கு பின்னே இருந்து பார்த்தேன்) பிறகு அவரை அருகாமையில் பார்த்தது நான்கைந்து வார்த்தைகளும் சில சொற்ப வினாடிகளும் - வாழ்வில் அற்புதமான கணங்கள். அவரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டு ஏதும் பேசாமல் ஒரு பார்வையோடு என் கை பிடித்து படியிறங்கி சென்றுவிட்டார். அவர் குஷ்பு என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர் யார் என பின்னர் சொல்கிறேன்.
சாரு புத்தகத்தை யாரும் வாங்கவேண்டாம் எச்சரிக்கை.. அப்படி தறுதலையாக ஸாரி தவறுதலாக வாங்கியிருந்தால்.. தயவுசெய்து பிரித்து படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... அப்புறம் அந்த போதையை நிறுத்துதல் என்பது இயலாத விடயம். ’சரசம்-சல்லாபம்-சாமியார்’ என்ற புத்தகத்தை வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்து 2 தோசையை கிள்ளி போட்டுக்கொண்டு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க(இரவு 11.30) அது விடியல் வரை துரத்திக்கொண்டே சென்றது.
இவர் சொல்லி நித்தியானந்தவை என்.எஸ்.பி நிகழ்ச்சியிக்கு பார்க்க போன பரிதாபமான ஜீவராசிகளில் நானும் ஒருவன். சென்றுவந்த மறுமாதமே அவர் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதாவுடன் காட்சி தந்து லோகத்தில் உள்ள குஞ்சுசுலுவானிகளிலிருந்து பெருசுகள் வரை அதிர்ச்சி தந்தது ஊரறிந்தது. ஆனாலும் நித்ய தியானம் நன்றாகவே இருந்தது. சக நண்பர்கள் நேரிலே வந்து கடைவைத்து கலாய்த்து போனார்கள். அப்போது எனக்கும் சாருவின் மீது எழுந்த கேள்விகளுக்கும் கோபங்களுக்கும் மிக அழகாக தெளிவாக அவருக்கே உரிய, ரோலர் கோஸ்டர் நடையில் ஒரு தொடராக fragments fragments ஆக, லாவகமாக நகர்த்தி சொல்கிறார். நாமும் அடுத்த சீன் என்ன என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
புத்தகத்தில் நீங்கள் எதிர்பாரா விடயங்களையும் நிறைய தெளித்து போகிறார் போகிறபோக்கில். புத்தர், இஸ்லாம், கிறித்துவம், அகோரி, இமயமலை, சந்திரசேகர ரெட்டி, அபி எம்.பி. (அபிக்கு கொடுக்கற definition :)) மற்றும் ஷிரடி பாபா,பாபாஜி, யோகனந்தா என்று வந்து போகும் கதா பாத்திரங்களும் காத்தரமான விஷயங்களும் நிறைய. புத்தக வெளியீட்டில் கவிஞர் ரவிக்குமார் எம்.எல்.ஏ சொன்னது போல வார பத்திரிக்கைக்கு மட்டும் எழுதாமல் அதன் குறுக்கு வெட்டு தன்மைக்கு ஏற்றால் போல வாகர்களுக்கு என்ன சேரவேண்டுமோ அதை துனிந்து கொடுத்திருக்கும் சாருவுக்கு ஒரு சபாஷ்.
நான் என் வாழ்க்கையில் முதன் முறையாக ஆட்டோகிராப் வாங்கிய அந்த நபர் எழுத்துசித்தர் பாலகுமாரன் தான். சாரு பிஸியாகவே இருந்ததால் [பெண்களுடன் பேசிபடியே(அழகிய)] அவருடைய கையெழுத்து வாங்கமுடியவில்லை. உண்மையில் சாருவின் அங்கதம் மற்றும் புதுவகையான எழுத்தில் மயங்கியே பாலகுமாரனிலிருந்து(Osho, JK சேர்த்துக்கொள்ளவும்) சாருவை வந்தடைந்தேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒன்று தெரிகிறது திரும்ப பாலகுமாரனுக்கே தாவிடலாமா அல்லது அமைதியாக இருந்துவிடலாமாவென? விழித்தெழுந்த மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். இருந்தாலும் சாருவின் பன்முகத்தண்மை வியக்கவைக்கிறது.
கடைசிவரை குஷ்பு வராதது பெரிய ஆறுதலும் கூட. சாரு புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் 13.12.2010 அன்று காமராஜ் அரங்கத்தில் வெளியிட்டதை பற்றிய பிரபல பதிவர்களின் பதிவுகள்
http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_16.html
http://www.jackiesekar.com/2010/12/13122010.html
http://www.narsim.in/2010/12/blog-post_15.html
இணையத்தில் வாங்க www.uyirmmai.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 6000018
91-44-24993448
uyirmmai@gmail.com
Tuesday, December 14, 2010
Monday, October 4, 2010
மனித நிறங்கள்

எதிர் கவுஜை
எல்லோராலும் முடிவதில்லை
தினம் ஒரு குவாட்டர் அடிக்க
சுதந்திரமாய் ஒரு தம் அடிக்க
பிகர்களை சைட் அடிக்க
நல்ல காற்றை சுவாசிக்க
டிராபிக் இல்லாமல் வண்டியோட்ட
பொண்டாட்டி கிட்ட எதிர்த்துபேச
உண்மையாய் இருக்கிறேன்
பேக்காய் இருக்கிறேனாம்
ரெட்டை சிகப்பென்றும்
ப்ளுவை நீலமென்றும்
தலையாட்டமுடியவில்லை
(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)
மாற்ற நினைத்தாலும்
மாறாத சில லூசுகளைக்போல
மாறாத லூசு நான்
பீர்
பீர்தான்
நானும் அப்படியே
ஹாட்ல இருந்து
கூலுக்கு மாறிட்டேன்
ஒரிஜினல் இங்க கிளிக் செய்து படிக்கவும்.
Saturday, October 2, 2010
எந்திரன் - ஒரு சிறிய பார்வை

ஒரே கதையை வைத்து பல படங்கள் பண்ணிய ஷங்கர் இதில் I-Robot-ன் இன்ஸ்பேரேஷனில், இவர் ஸ்டைலில் படம் செய்து இருக்கிறார்.
Second half-ல் கலாபவன்மணியின் கண்களில் மண்ணைதூவிட்டு ஓடிவந்து மூச்சிறைக்கிறார்கள் கதையின் நாயகனும் நாயகியும்... அங்கே தான் படமும் மூச்சிரைக்க ஆரம்பிக்கறது. அங்கே தொடங்கியது வில்லன் ரஜினி ‘ரோபோ’ என்னும் வரையில் நம்மை வறுத்துதெடுக்கிறார்கள். முதல்பாதியில் உள்ள வேகம் இரண்டாவது பாதியில் இல்லை. ஷங்கரின் அடுத்த படம் மிகவும் போர் அடிக்கும்... இது எனது சொந்த கணிப்பு.
பாப்கார்ன் 70ரூ அது தியேட்டர் முழுக்க சிதறிகிடக்கிறது... 70 ரூபாய் என்பது ஒரு அடிதட்டு மக்களின் ஒரு நாளைய குடும்ப சாப்பாட்டு செலவு. படத்துக்கு நான் செய்த செலவு 1350... மூன்று பேருக்கு. இதுவும் அ.த.மக்களின் பாதிமாதச்செலவு. (ஷங்கர்தான் கருத்து சொல்லனுமா நாங்க சொல்லமாட்டோமா?)
Interval விட்டவுடன் என் பையன் ‘அப்டியே சுடனும்போல இருக்கு’ என்றான்... ஏன் என கேட்க ... Interval விட்டவங்களையான்.. அந்த அளவுக்கு interesting, informative, dialogues, speed.. in first half. தமிழுக்கு எல்லாம் புதுசு. ஒரு டிக்கெட் விலை 300.. அது first halfகே கொடுக்கலாம்... அப்புறம் அம்புடுதேன்...
இந்த படதிற்கு மீடியா கொடுத்த ஹைப் இருக்கே சொல்லிமாளல.. முக்கியமா NDTVHINDU, Sun Network, NDTV Profitல கூட ... என்ன கொடுமை சரவணா இது...
தலைவர பஞ்ச டயலாக் பேசவுட்டு... பல ஸ்டையல்கள காட்டியிருந்தா பின்னால் வரும் தோய்வை சரிகட்டியிருக்கலாம்... கமலா தியேட்டர் screen 2ல காத பஞ்சர் ஆக்கிட்டாங்க...
காலைல 5.30 மணிக்கு இரண்டு தியேட்டரில் டிக்கெட் இருந்தும் நான் தூங்கியது கண்டு என்னை நானே மெச்சிக்கொண்டேன்... கடைசியில் ஈவினிங் ஷோக்கு என்னிடம் வேலை பார்க்கும் தம்பி டிக்கெட்டை கையில் வந்து கொடுத்தான்... அடித்தது எந்திரனுக்கு யோகம்.
ஓம் சாந்தி ஓமில் வருவது போல கடைசியில் பங்குபெற்றவர்களை visual treatடாக கொடுத்துயிருக்கலாம்... மணிரத்தினம் படம்போல பெயர்களை போட்டு போரடித்தார்கள்.
தலைவருக்கு கழுத்திலிருந்து உடை அணிவித்துயிருக்கிறார்கள். காரணம் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். ’ஜஸ்’ லாலாக்கு டோல் டப்பிமா போலியிருக்கிறார்... இரண்டு வயதானவர்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் எவ்வளவு கஷ்டப்பட்டியிருப்பார் என்பது புரிகிறது.
சாபுசிரிலை International criminalகளின் transilator ஆக்கியிருக்கிறார்கள்... இரண்டு சீணுக்கு வந்து போனாலும் பாந்தம். கலாபவன்மணி வீணடிக்கப்பட்டுள்ளார். லிஸ்ட்டில்.. கருணாஸ் சந்தாணம் சேர்த்துக்கொள்ளலாம். படம் முழுக்க திகட்ட திகட்ட ரஜினி.
Second half bore, first half nonsense to the core.. superb..
வழக்கம்போல குடும்பத்தோட ரசிக்கலாம்.
Tuesday, September 14, 2010
மாப்பிள்ளை ஜோரில் பங்குசந்தை

தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கையில் இப்போதே தலதீபாவளி கொண்டாடும் புதுமாப்பிள்ளையாக பந்தா காட்டுகிறது நம் பங்குசந்தைகள். மே மாதம் பங்குசந்தை வீழ்ச்சி கண்டதும்; அவ்வளவுதான் இனி மீள எத்தனை மாதம் ஆகுமோ என்று வருந்தியவர்களுக்கு ஒரே பாடலில் பணக்காராணாகும் நம்மூர் ஹீரோ போல பங்குசந்தை ஒரு சில மாதங்களிலேயே ஏகத்துக்கும் வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றிருக்கிறது. சந்தையின் இந்த அபார வளர்ச்சி உள்நாட்டு வர்த்தகர்கள் லாபம் அடைந்தார்களா என்றால், ’இல்லை’ என்றே பதில் வரும்.
முதலீட்டாளர்களுக்கு சந்தை விழுந்தாலும் சரி, வளர்ந்தாலும் சரி முதலில் பலன் வந்து சேரும். ஆனால் வர்தகர்களோ சந்தை போக்கு எப்படியிருப்பினும் ஏற்ற-இறக்க அசைவின் அடிப்படையில் பலனை அனுபவிப்பார்கள். சந்தை மேலே சென்றாலும் தின வர்த்தகர்களுக்கு ஏற்ற சூழல் அமையவில்லை. இதில் பெரிதும் லாபம் அடைந்தது FII’s எனப்படும் பண்ணாட்டு அமைப்புசார் முதலீட்டாளர்களே.
அதிபுத்திசாலிகளே நோட் பண்ணுங்க
1. பொதுவாக ஒரு மாதத்துக்கு ஒரு முறையாவது பங்குசந்தை மேலிருந்து கீழ் சென்று திருத்தம் (correction) காணும் ஆனால் நான்கு மாதமாகியும் திருத்ததிற்கான சான்றுகூட இல்லை.
2. சந்தை மேலேறும்போது வியாபார தடங்களான calloption சரி put option சரி ஒரே அளவில் வர்த்தகம் ஆகாது இந்த முறை OPTION வியாபாரத்தில் இரு வாய்ப்பிலும் ஒரே அளவில் பணமும், பங்கும் வர்த்தகமாகிறது.
3. பங்குகள் பலவும் தங்கள் தடைநிலை அருகிலும் தாண்டியும் வர்த்தகமாகின்றன.
4. உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளைவிட அயல்நாட்டு பொருளாதார சூழலை தாங்கியே நம் பங்குசந்தை வளர்கிறது.
இது சந்தோஷமா? இல்லை சங்கடமா?
நம் பங்குசந்தைகளின் இந்த வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சிக்குறியதாய் இருந்தாலும் சந்தையில் தொடர்புள்ளவர்கள் இதை கொண்டாடலாமா அல்லது அமைதி காக்கலாமா? என்று குழப்புகிறார்கள். முன்பு சந்தை 5400 தொட்டதுக்கே சூப்பர் ஸ்டார் பட ரிலீஸ்போல் ஆட்டம் போட்டவர்கள் இப்போது 5800 என்ற இமயத்தை கடந்தும் ஆர்பாட்டமின்றி அடக்கி வாசிக்கிறார்கள். இதற்கு 2008-ஐ போல் நன்றாய் பறந்து புன்னாக்கும் தீபாவளி ராக்கெட்டாய் சந்தை ஆகுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த குழப்பம். இறங்குதோ இல்லையோ கொண்டாட கிடைக்கும் இத்தருணத்தை நழுவ விடாமல் கொண்டாடுவதே புத்திசாலித்தனம்.
எப்போது திருத்தம் (correction)
என்னதான் பாஸிடிவா பேசினாலும் நெகடீவா சந்தைய அனுகியவர்கள் இப்போது அவஸ்தை படுகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவது :P
மாமியார் (அயல்நாட்டு முதலீடு) உபசரிப்பில் மாப்பிள்ளை (சந்தை) பந்தா காட்டினாலும் எத்தனை நாள் தான் உபசரிப்பார் அந்த மாமியார் கல்யாண பந்தியில் நேரம் நீண்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தி முடிக்கப்பட வேண்டும். அதுபோல சந்தையில் இந்த சக்கைபோடும் விரைவில் அடங்கும். சந்தையில் செய்தியின்மை, ஆவல், அயல்நாட்டு முதலீடு, அதிக பணப்புழக்கம் போன்றவையாகச் சந்தை ஏறியது விரைவில் இந்த சூழல் எதிர்வினையில் அமையப்போவதால் சந்தை நன்றாக கீழிறங்கும். தாங்கு நிலைப்பற்றிய முரண்பாடு நிலவினாலும் தேசிய பங்கு சந்தை குறுகிய காலத்தில் 5200-ஐ தாங்கு நிலையாகவும் 5950 தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகமாகும்.
கட்டுரை உதவி: சிவசங்கர்
Sunday, September 12, 2010
பதிவுலகம் - இப்படிக்கு நான்

சித்தப்ஸ் பா.ரா அழைத்த தொடர் பதிவு இது. ஒன்னரை மாதத்தில் இப்பொழுது கிடைத்த 10 நிமிடத்தில் நெய்த பதிவு.
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
D.R.Ashok
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அஷோக் தாங்க
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வேறென்ன... பெரிய தமிழ் வார பத்திரிக்கைகள் போரடிக்க ஆரம்பித்ததால், சுஜாதாவும் இல்லை, அப்புறம் சாரு எஸ்.ரா போரடிக்க ஆரம்பித்தனால்.. வலையுலகில் நல்ல கவிஞர்கள் இல்லாததால்... தேவலோகத்தில் போட்ட மீட்டீங்கில் முடிவெடுத்து.. எல்லோரும் சிவபெருமானிடம் முறையிட.. சிவனும் ஆனந்த தாண்டவம் ஆடி.. இனி மண்ணுலகத்தில் D.R.அஷோக் கவிதைகள் எழுதி ’கொட்டாவி விடும் வலையுலகை’ குத்தாட்டம் ஆட செய்வார் என ரட்சிக்க நானும் கோதாவில் குதிக்க...
4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
மவுண்ட்ரொடில் கட்டவுட் வைத்தேன், Times of Indiaல விளம்பரம் கொடுத்தேன்....உண்மைய சொல்லனும்னா.. ஒன்னும் செய்யல..
5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என் மனதின் உள் ஓசைகளையும்... கேட்டறிந்த ஓசைகளையும்.... ஒத்திசைவாகத்தான்.. என்னிசையை கோர்கிறேன்..
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டும் அல்ல......வாழ்க்கை தந்த நெடிய கசப்புகளில் மூழ்கிபோகாமலிருக்க
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
ஒன்னே ஒன்னு...
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம்- ஏற்பட்டது உண்டு. கோபம்தானே, இப்போ போயிடுச்சு!
பொறாமை – அப்படின்னா..?
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
’சக்கரை’ சுரேஷ், இளைஞர், இப்பொழுது எழுதுவதில்லை. கேட்டால் போரடித்துவிட்டது என்று கூறினாராம்.
10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்
என்னை பற்றி:
ஓவியன், நீண்ட பயணங்கள் தேசிய நெடுஞ்சாலையில், ட்ரெடிங் கம்பெனியில் ஹெட்ஜிங் அனலிஸ்டாக(Hedging Analyst) இருக்கிறேன்.
அழைக்க விரும்புவர்கள்:
1. யாத்ரா
2. மண்குதிரை
3. தேணம்மை
4. ஹேமா
5. பத்மா
இந்த லிஸ்டல ஏற்கனவே எழுதியிருந்த உட்ருங்க.. லிஸ்ட்ல விடுபட்ட நண்பர்கள் எல்லாம் எழுதுங்க... நேரம் கிடைக்க சொல்லோ..
Wednesday, July 14, 2010
உதை

அன்பே எப்படி இருக்கிறாயடி.. பணிக்கு கிளம்பவில்லையா...
கிளம்பிட்டேயிருக்கேன் அதான் பேச வரலை..அப்பாக்கு எப்டியிருக்கு?
மிகவும் நன்றாக உள்ளாரடி... இன்னும் சில காலம் இருப்பார் என்பது மகிழ்ச்சியே மனதுக்கு...
செம்மொழி மாநாடு வந்த அப்புறம் ஒரு மாதிரிதான் இருக்கீங்க
நீ கூறிய இரு பாடல்களின் வரிகளே காரணம்
ஒ.. ஒ.. ஆளபாரு
அப்பறம் உனை பிரிந்துருகும் பசலையும் ஒரு காரணி
உதைவிழும் ஒழுங்கா வேலையை பாருங்க.. எப்பவும் lol
நீ ’உதை’ என்பதும் சந்துருஷ்டியே தருகிறது.. காதல் ஒரு மாயப்பேயே
காதல் கத்திரிக்கா..!
இல்ல தக்காளி..
எதுக்கு சாம்பார் பண்ணவா..?
இல்ல கடிச்சு சாப்பிடத்தான்.. பெங்களூர் தக்காளியடி உன் கண்ணம்.. உயிரே உயிரே...
பாட்டு நல்லாயிருக்கா...?
நீ எந்த பாடலை குறிப்பிட்டாலும் அது நல்லாதான்யிருக்கும்.. ஏன்னா இதுல நம்ம டேஸ்ட் ஒத்து போகுது...(வேற ஒரு விஷயத்தில் மட்டும்)
ம்ம்... ஆனா என்னை திட்டினிங்க...
பொண்டாட்டிய புருஷன் திட்டாமா வேற எந்த நாய் திட்டும்
உங்கள திருத்த முடியாது... சாப்பிட்டிங்களா?
மொத மொத உன்னை சந்திக்கும் போது நல்ல காதல் பாட்டுதான் ஓடிச்சு.. அப்போ சத்தியமா நான் நினைக்கல.. எனக்கு பிடிச்சமானவள சந்திக்கறன்னு
ஐய்யோ ஐய்யோ தாங்கல
ஏன் திருந்தனும்.. உன்னை நினைச்சு இருக்கறதே சந்தோஷம்தான்.. சாப்பிட்டேன்.... நீ
இல்ல office போயிட்டு அப்புறம்
ஒ... I love u di
அப்படியே எப்பவும் அன்பா இருந்தா சந்தோஷம்
Thank you darling… ஏன் சில சமயம் நான் அன்பா இல்லையா?
ஆன்லைன்ல் இருக்கும்போது பேசமாட்றீங்க...
ஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard
ம்ம்ம் அப்படின்னா சரிதான்.. வேலைதான் முக்கியம்
கவித மனசே காணாமல் போயிடுச்சு... அப்ப அப்ப உன் ஞாபகம்தான் அத மீட்டெடுக்குது
ஒழுங்கா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க...
சரி நான் போறேன்(போயிட்டு வர்றேன்)
ஓகே டார்லிங் டேக் கேர்..
பதிவு போடுங்க... நினைக்கறதே எழுதுங்க..
அதுக்கு நீ முத்தம் கொடுக்கனும்
(அதுக்கு அவள் சொன்ன பதில்தான் தலைப்பூ)
Monday, June 21, 2010
நன்றி

பதிவுலகத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கும் போது ஒரு அங்கிகாரம். ஒரு தட்டி கொடுத்தல். பெரிய ஆளுமைகளின் நடுவே என் பெயரும் அதுவும் சிறந்த நடுவர்களின் தீர்ப்பு. கொஞ்சம் ஆடித்தான் போனேன்.. ’உறுபசி’ ஒரு சில வினாடிகளில் வந்து போனதுதான்.. அதன் கடைசி நாலு வரிகள் மட்டும் நின்று யோசித்தது. கவிதை என்பது உணர்வுகளின் கொதிநிலை என்று பெருந்தேவி சொல்வார். எனக்கு ’அந்த நேரத்து கொதிநிலை’ அவ்வளவே.
மகிழ்ச்சியாக உள்ளது. ஜ்யோவ்(சிவ)ராம் சுந்தர் - இருவருக்கும் எனது நன்றி மட்டும் அன்புகள். போனில் முதலில் பாராட்டிய மும்பை புகழ் பிரபல கவிஞர் பாட்ஷா அனுஜன்யா(அப்புறம்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது),கவிஞர் யாத்ரா, கவிஞர் முத்துவேல், சித்தப்ஸ், ஹேமா, பத்மா, ரிஷான் ஷெரிப், கமலேஷ், உழவன், ஜெனோவா மற்றும் பலர்.. மடலிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் நண்பர்களுக்கும்.. தோழிகளுக்கும் வாழ்த்தபோவோர்களுக்கும் நன்றி...
எனது அங்கிகாரத்தை... கவிதை போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... மிகுந்த அன்புடன் உங்கள் D.R.அஷோக்
Subscribe to:
Posts (Atom)